சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமலாலயம் ஆக்சன்! அண்ணாமலை இலங்கையில் இருக்கும்போதே.. சட்டென வெளியான "லிஸ்ட்".. கியரை மாற்றிய பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். புதிய நிர்வாகிகள் பலர் நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை தலைவராக பதவி ஏற்றபின் கட்சிக்குள் புதிதாக நிர்வாகிகள் பெரிய அளவில் மாற்றப்படவில்லை. புதிதாக ஒரு தலைவர் பதவி ஏற்ற பின் பொதுவாக இது போன்ற பதவிகள் மாற்றப்படுவது வழக்கம். ஆனால் பெரிதாக இதில் பதவி மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை.

ஆனால் அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகப்போகின்றன. ஆனால் இதுவரை மாநில பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

இலங்கை சீதை கோவிலில் அண்ணாமலை தரிசனம்... என்ன சொன்னார் தெரியுமா!இலங்கை சீதை கோவிலில் அண்ணாமலை தரிசனம்... என்ன சொன்னார் தெரியுமா!

பாஜக மாற்றம்

பாஜக மாற்றம்

அதேபோல் மாவட்ட அளவில் செயலாளர்களையும் பாஜக மாற்றாமல் இருந்தது. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக கூறப்பட்டு வந்தது. முக்கியமாக மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதில் மூத்த தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இதற்கான உத்தேச லிஸ்ட் தயாரிக்கப்பட்டதாக முன்பு ஊடகங்களில் தகவல்கள் வந்தன.

உத்தேச லிஸ்ட்

உத்தேச லிஸ்ட்

ஆனால் உத்தேச லிஸ்டை பாஜகவின் மூத்த தலைகள் சிலர் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக பாஜக சார்பாக தமிழ்நாட்டில் புதிய மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி பட்டியல் இறுதி செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

நியமனம்

நியமனம்

இந்த நியமனம் தொடர்பாக கடந்த 2 மாதமாக தீவிரமான ஆலோசனைகள் செய்யப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட 420 பொறுப்புகள் பாஜகவில் ஒவ்வொரு 3 ஆண்டுங்களுக்கும் மாற்றப்படும். அதன் அடிப்படையில்தான் இந்த முறையும் மாற்றம் நிகழ்ந்து உள்ளது. அதன்படி புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 59 மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றம்

மாற்றம்

விரைவில் மாநில பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. முன்னதாக மாநில பொதுச்செயலாளர்களை நியமனம் செய்வதில் அண்ணாமலைக்கும் மூத்த பாஜக நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் முதல் கட்டமாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை பயணம்

அண்ணாமலை பயணம்

தமிழ்நாடு பாஜக தலைவர் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கைக்கு செல்லும் முன் இந்த பட்டியலை தயார் செய்துவிட்டு அதற்கு ஒப்புதல் அளித்தார். தேசிய தலைமையும் இந்த லிஸ்டிற்கு ஒப்புதல் அளித்த நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தயாராகி வரும் நிலையில் முதல் கட்டமாக நிர்வாகிகளை மாற்றம் செய்து.. தேர்தலுக்காக அக்கட்சி கியரை மாற்றி உள்ளது.

English summary
BJP Chief Annamalai announces new distric chief and working committe members names. தமிழ்நாடு பாஜகவில் மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X