சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக புதிய தலைவர் தொடர்பாக ரஜினிக்கு தூது விட்டதா பாஜக..?

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தமிழகத் தலைவராக யாரை நியமிக்கலாம் என ரஜினிகாந்திடம் ஆலோசனை கேட்டு பாஜக தூது அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியுடனும், உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷாவுடனும் தொலைபேசியில் பேசும் அளவுக்கு நெருக்கமானவர் நடிகர் ரஜினிகாந்த். காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்தது அனைவரும் அறிந்தவை.

bjp asked suggestion for new president issue?

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்தப் பதவிக்கு யாரை நியமித்தால் பொருத்தமாக இருக்கும் என பாஜக மேலிடத் தரப்பில் இருந்து ரஜினிகாந்திடம் கருத்துக் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் வழக்கம் போல் சிரிப்பையும்,அமைதியையும் மட்டுமே பதிலாக தந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஜினியிடம் கருத்துக் கேட்க என்ன இருக்கிறது என்பது குறித்து நாம் விசாரித்ததில், என்ன இப்படி கேட்டுடீங்க.. ரஜினி பாஜகவில் இணைய வேண்டும், அவரும் இணைவார் என தலைமை எதிர்பார்த்தது. ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறார் ரஜினி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நீதிமன்ற அறையில் ப.சிதம்பரத்துக்கு கம்பராமாயணம் புத்தகத்தை அளித்தார் மனைவி நளினி சிதம்பரம்நீதிமன்ற அறையில் ப.சிதம்பரத்துக்கு கம்பராமாயணம் புத்தகத்தை அளித்தார் மனைவி நளினி சிதம்பரம்

ஆகையால், ரஜினியுடன் அனுசரித்து செல்லக் கூடிய, கூட்டணியில் அவரின் தலைமையை ஏற்று நடக்கக்கூடிய ஒருவரை தலைவராக்க கூடும் என பதில் கிடைத்தது. மேலும், தற்போதைக்கு இடைக்கால தலைவராக ஒருவரை நியமித்து அவரின் செயல்பாட்டை பார்த்து நிரந்தரமாக்கவும் அல்லது மாற்றப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாம் சரி சூப்பர் ஸ்டார் முதலில் அரசியலுக்கு வரனுமே...!

English summary
Sources say that BJP high command is discussing about its news president for TN unit with Rajiniknath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X