4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக
சென்னை: தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 4 மாநகராட்சிகளை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுகவுக்கு அழுத்தம் தரப்படுகிறதாம்.
அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, த.மா.கா ஆகிய கட்சிகள் உள்ள நிலையில் இப்போதே இட பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுத்தது அதிமுக.

4 மாநகராட்சிகள்
உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சிகளை கட்டாயம் தர வேண்டும் என அதிமுக தலைமைக்கு பாஜக தரப்பில் அழுத்தம் தரப்படுகிறதாம். இதனால் என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் அதிமுக தலைமை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாம்.

பாஜக லிஸ்ட்
கோவை, நாகர்கோவில், திருப்பூர், வேலூர் ஆகிய 4 மாநகராட்சிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்கு போட்டுள்ளது பாஜக. இதனால் அந்த 4 மாநகராட்சிகளையும் அதிமுகவிடம் இருந்து எப்படியாவது பெற வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகள் தீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்.

ஏமாற்ற முடியாது
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் சரியாக பயன்படுத்தி கட்சியை இன்னும் வலுவாக இங்கு கட்டமைப்போம். கடந்த எம்.பி.தேர்தலில், அதிமுக முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், இந்த தேர்தலில் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டு நாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் அதிமுக இடம் ஒதுக்கக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

நேரடி பேச்சு
அமெரிக்கா சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தான் சென்னை திரும்பியுள்ளார். இதனால் ஓரிரு நாட்கள் கழித்து நேரடியாக அவரிடமே கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக பாஜகவினர் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications