அமித் ஷா கேம் ஸ்டார்ட்.. 2024ல் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்றால்.. பாஜகவிடம் இப்படி ஒரு பிளானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பாஜகவிடம் முக்கியமான ஒரு பிளான் இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.

பாஜகவின் பிளான் பற்றி பார்க்கும் முன் தேசிய அளவில், மாநில அளவில் தேர்தலுக்கு பின் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் குறித்து பார்க்கலாம். இப்போது 543 தொகுதிகள் நடாளுமன்றத்தில் உள்ளன. இதில் 272 எடுத்தால் மெஜாரிட்டி.

lok sabha election 2024

ஒரு கட்சி இந்த மேஜிக் நம்பரை எடுக்கிறது என்றால் அதை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைக்கலாம், அல்லது அந்த கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். சரி இப்போது தனியாக ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்றால் அவர்களின் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.

ஒரு கூட்டணிக்கு.. அதாவது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் அளவிற்கு இடம் இருந்தால் ஆட்சி அமைக்கலாம். சரி இப்போது இந்தியா கூட்டணி, பாஜக என்டிஏ கூட்டணி உள்ளது .

பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி இருந்தால் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். என்டிஏவிற்கு மெஜாரிட்டி இருந்தால் அவர்களும் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். காங்கிரசுக்கும் மெஜாரிட்டி இருந்தால் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். இந்தியா கூட்டணிக்கும் அதே விதிதான்.

பாஜக பிளான்; ஆனால் பாஜகவிடம் வேறு ஒரு பிளானும் உள்ளதாம். இப்போது காங்கிரஸ், பாஜக மற்றும் என்டிஏ கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை என்றாலும் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.

இப்படித்த சமயங்களில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் அதற்கு பதிலடி பாஜக தான்தான் தனியாக அதிக இடங்களை வென்ற கட்சி . அதனால் எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை அளிக்க வேண்டும். ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உரிமை கோர வாய்ப்புகள் உள்ளதாம்.

கர்நாடகாவில் கடந்த தேர்தலுக்கும் முந்தைய தேர்தலில் தொங்கு சட்டசபை உருவான போது மெஜாரிட்டி இருந்த காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லை என்றாலும் ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்தார்.

மாடல்: அதே மாடலை தேசிய அளவில் பாஜக செய்யலாம் என்கிறார்கள். குடியரசுத் தலைவர் இப்படி அழைக்கும் பட்சத்தில் பாஜக மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

ஆட்சி அமைத்து அதன்பின் இந்திய கூட்டணியை பாஜக உடைக்கலாம். காங்கிரஸ் எம்பிக்களை வாங்க முயற்சி செய்யலாம். ஏன் காங்கிரஸ் கட்சியையே உடைக்கலாம். திமுக போன்ற கட்சிகளின் ஆதரவை பெற முயற்சி செய்யலாம். ரிசார்ட் அரசியல் இதனால் தீவிரம் அடையும் வாய்ப்புகள் உள்ளன .

மாநில அளவில் இப்படி நடந்துள்ள நிலையில் தேசிய அளவிலும் இந்த மாடல் தலைதூக்க வாய்ப்புகள் உள்ளன. 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பாஜகவிடம் இப்படி முக்கியமான ஒரு பிளான் இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+