டெல்லிக்கு ஷாக் ரிப்போர்ட்.. சென்னைக்கே கிளம்பி வந்த பி.எல். சந்தோஷ்.. நிர்வாகிகளுக்கு டோஸ்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மண்டல பொறுப்பாளர்களை நியமித்து திமுக டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. மறுபக்கம் அதிமுக பாஜக கூட்டணி அவர்களுக்குள்ளே மல்லுகட்டி கொண்டிருக்கிறது. இந்த களேபரத்துக்கு நடுவில் தான் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் சென்னைக்கு திடீர் விசிட் அடித்து பாஜகவினருக்கு செம டோஸ் விட்டு சென்றுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. வலுவான திமுக கூட்டணியை வீழ்த்துவதற்காக, இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று கீறியும், பாம்புமாய் சீறிக் கொண்டிருந்த அதிமுக, பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இதற்காகவே மாநிலத் தலைவர் இடத்தில் அண்ணாமலை மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டார்.

அதிமுக - பாஜக கூட்டணியை இரண்டு கட்சிகளின் தலைமை ஏற்றுக் கொண்டாலும், இரண்டு கட்சிகளில் உள்ள தொண்டர்களும், பல நிர்வாகிகளும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமூகவலைதளங்களில் இப்போதும் அதிமுக, பாஜக இடையே வார்த்தை போர் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் விரிசல்கள் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் சீரியஸை உணர்ந்த நயினார் நாகேந்திரன், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்க கூடாது என்று ஸ்ட்ரிக்டான உத்தரவு போட்டார்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், நேற்று இரவு சென்னைக்கு ரகசியமாக விசிட் அடித்துள்ளார். நேற்று இரவு அவர் தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் தான் தங்கியுள்ளார். ஆனால், சென்னையில் உள்ள உளவுத்துறைக்கு கூட பி.எல். சந்தோஷ் வந்தது தெரியவில்லை. அவர்களுக்கு மட்டுமல்ல சந்தோஷின் விசிட் தமிழக பாஜகவினருக்கும் கூட தெரியவில்லை.
இதையடுத்து இன்று காலை தான் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகளுக்கும், சென்னையில் உள்ள.மாவட்ட தலைவர்களுக்கும் தகவல் சென்றுள்ளது. அவர்கள் அவசர அவசரமாக கமலாலயம் சென்று பார்த்துள்ளனர். பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும் நாகாலாந்த் ஆளுநருமான இல.கணேசனின் 80-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே சந்தோஷ் சென்னை வந்துள்ளார்.
பி.எல் சந்தோஷ் தன்னைச் சந்தித்த தமிழக பாஜக நிர்வாகிகளிடம் விரிவாகவே பேசியுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம், அதிமுகவுடன் கூட்டணி, தேர்தலை எதிர்கொள்வது குறித்து சந்தோஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய சந்தோஷ், "2026 தேர்தலில் திமுகவை வீழ்த்துவதுதான் நம்முடைய ஒரே நோக்கம். அதற்கேற்ற வகையில் அரசியல் செய்ய வேண்டும்.
திமுகவுக்கு எதிராக பாஜக சரியாக செயல்படலை என்று டெல்லிக்கு ரிப்போர்ட் வருகிறது. உங்கள் எல்லோரையும் டெல்லிக்கு வரவழைக்கும் சூழல்களை எங்களுக்கு உருவாக்கிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிமுக-பாஜக கூட்டணிக்கு பிரச்னை வருவது போல நடந்து கொள்ளக் கூடாது. நமக்க ஒதுக்கப்படும் சீட் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.
ஆனால் அனைத்துமே வின்னிங் சீட். எனவே சீட் அதிகம் வேண்டும் என்று சொல்லி கூட்டணியை கலைத்துவிட கூடாது. தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே பேசி முடித்துவிட்டோம். அதைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். கெளரவமான எண்ணிக்கையில் நாம் போட்டியிடுவோம்." என்று அட்வைஸ் செய்திருக்கிறார் சந்தோஷ்.
சந்தோஷின் பேச்சில் வழக்கத்துக்கு மாறாக எச்சரிக்கை வெளிப்பட்டதை பாஜக நிர்வாகிகள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும், பாஜக நிர்வாகிகள் சிலருக்கு, சந்தோஷிடம் செமத்தியான டோசும் இந்த சந்திப்பில் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications