3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்.. தேர்தலுக்கு முன் - பின்.. தமிழிசை பேசியதும் நடந்ததும்
சென்னை: தென்சென்னை தொகுதியில் 2, 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறிய பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். தேர்தலுக்கு முன்பு அவர் பேசியதையும், தேர்தலுக்கு பின் நடந்ததையும் இங்கே பார்க்கலாம்.
நாடு முழுவதும் நடந்து முடிந்த 18-வது லோக்சபாவிற்கான தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப் போட்டி நிலவியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட்டு 11 ல் டெபாசிட்டை பறிகொடுத்தது.

அதேவேளையில் தென் சென்னை, வட சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, நெல்லை, உள்பட 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி 2 ஆம் இடத்தை பிடித்தது. பாஜக 2 ஆம் இடத்தை பிடித்த தொகுதிகள் பெரும்பாலும் அக்கட்சியின் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிட்ட இடமாகும்.
குறிப்பாக ஆளுநராக இருந்து பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னையில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,16,628 வாக்குகள் பெற்றார். 2 ஆம் இடத்தில் தமிழிசை சவுந்தரராஜன் 2,90,683 வாக்குகளை பெற்றார். தமிழச்சி தங்க பாண்டியனை விட 2,25,945 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதிமுகவின் ஜெயவர்த்தன் மூன்றாவது இடத்தை பெற்றார்.
இதற்கிடயேதான் தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழிசை தென் சென்னை தொகுதியில் அண்ணாமலையுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்பொது அவர் பேசுகையில், "வெற்றி பெற போவது உறுதி.. அண்ணாமலை வரும் போது என்னிடம் கேட்டார்..
அக்கா எத்தனை ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று கேட்டார். நான் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அண்ணாமலை இங்கே வந்த பிறகு சொல்கிறேன் 2, 3 லட்சமாக மாறியது. ஏனென்றால் நாமெல்லாம் லட்சதியத்திற்காக பாடுபடுகிறோம். அண்ணாமலையை நான் பாராட்டுகிறேன்.
ஏனென்றால் சாமானிய இடத்தில் இருந்து இவ்வளவு பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்றால் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும். தென் சென்னையில் உள்ள கேகே நகர் வினாயகர் கோவிலில் வைத்துதான் பாஜகவில் இணைய வேண்டும் என்று நான் முடிவு எடுத்தேன்" என்று பேசினார். தமிழிசை தற்போது 2.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் இணையத்தில் மீண்டும் தமிழிசை பேசியது வைரலாகி வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications