Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 நாள் கூட ஆகலயே! பொன்னையன் "அப்படி" சொன்னதும்.. ஆக்சனில் குதித்த பாஜக.. நிர்மல் போட்ட உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக ஐடி விங்கில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் தற்போது ஐடி விங்கை பலப்படுத்துவதற்காக தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் திமுக தரப்பு மொத்தமாக ஐடி விங்கை மாற்ற முடிவு செய்துள்ளது.

ஐடி விங் 2.0 என்ற திட்டத்தை கையில் எடுத்து ஆளும் திமுக தரப்பு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன் மாநில செயலாளர் டிஆர்பி ராஜா வகுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் முனைப்பில் இருக்கிறார்.

ஐடி விங்

ஐடி விங்

அதேபோல் அதிமுகவும் தங்கள் ஐடி விங்கை மொத்தமாக சீரமைக்கும் பணியில் இறங்கி உள்ளது. இதற்காக கடந்த இரண்டு நாட்களாக அதிமுக ஐடி விங் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் முன்னெடுப்பில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் எப்படி அதிமுக ஐடி விங்கை மேம்படுத்துவது, கட்சியை எப்படி மக்களிடம் இணையம் வழியாக கொண்டு செல்வது என்ற ஆலோசனைகளை இந்த மாநாட்டில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

அதிமுக ஐடி விங்

அதிமுக ஐடி விங்

இதில் நேற்று முதல்நாள் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பாஜகவிற்கு எதிராக பேசியதுதான் பெரிய அளவில் சர்ச்சையானது, பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது. அதற்கான பிம்பத்தை ஏற்படுத்த பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். இதற்காக நம்முடைய ஐடி விங் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது.

பாஜக எதிர்க்கட்சி

பாஜக எதிர்க்கட்சி

பாஜக எதிர்க்கட்சி போல செயல்பட தங்களை காட்டிகொள்கிறது. பா.ஜ.க.தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை. அந்த பிம்பத்தை நாம் உடைக்க வேண்டும், என்று பொன்னையன் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஏற்றபடி அதிமுக ஐடி விங்கில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பல்வேறு புதிய நியமனங்கள் அதிமுக ஐடி விங்கில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

அதிமுக பொன்னையன் இப்படி பாஜகவை விமர்சனம் செய்து 2 நாள் கூட ஆகாத நிலையில்தான், திடீரென தமிழ்நாடு பாஜக ஐடி விங்கில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிமுக தனது ஐடி விங் மீது கவனம் செலுத்தி உள்ள நிலையில் பதிலடியாக பாஜகவும் ஐடி விங் நிர்வாகிகளை மாற்றி உள்ளது. அதன்படி மொத்தம் 60 பாஜக அமைப்பு மாவட்டங்களில் 49 மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். 49 மாவட்டங்களுக்கு புதிய ஐடி விங் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் இன்னும் சில தினங்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

புதிய நிர்வாகிகள் நியமனம்

புதிய நிர்வாகிகள் நியமனம்

இதற்கான அறிவிப்பை பாஜக தமிழ்நாடு ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் வெளியிட்டார். சமீபத்தில்தான் பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். பாஜக மாநிலச் பார்வையாளர்களாக கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூர்யா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டனர். பாஜக மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் தொடர்கிறார்; இணைப் பொருளாளராக எம்.சிவசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ஐடி விங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+