அவசரம்.. கிளம்பி வாங்க! டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை.. அதிமுக முடிவால்.. அரண்டு போன பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

அண்ணாமலை பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு காரணம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அண்ணாமலை அவசர பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக பாஜக மோதல் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது.

BJP Chief Annamalai is going to Delhi today to talk on AIADMK BJP Alliance break

அதிமுக - பாஜக மோதல்: பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி பேசினார். ஊழலுக்கு சிறை சென்ற முதல்வர் என்று கடுமையான வார்த்தைகளில் விமர்சனம் செய்தார். அதிமுகவுடன் கூட்டணி இருக்கும் போதே அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரை அண்ணாமலை விமர்சனம் செய்தது அதிமுகவினர் இடையே கடுமையான எதிர்வினைகளை பெற்றுக்கொடுத்தது.

இதற்கு அதிமுகவினர் கடுமையான பதிலடி கொடுத்தனர். அதோடு அந்த மோதலின் போதே அதிமுகவிற்கு பாஜகவின் டாப் நிர்வாகிகள் பலர் சென்றனர். பாஜகவில் இருந்த பலர் அதிமுகவிற்கு சென்றது பாஜக கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மோதல் அடுத்த கட்டம்: அதை தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் ஒரு படி மேலே போய்.. உச்சம் அடைந்தது. அதன்படி பாஜக தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணா - தேவர் இடையே நடந்த சம்பவம் ஒன்றை குறித்து வரலாற்றுக்கு புறம்பான கருத்துக்களை கூறினார். முழு ஆதாரமற்ற தகவல்களை அவர் கொடுத்தார்.

அவரின் பேச்சு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. அவர் சொன்ன வார்த்தைகள் அதிமுகவினரை கோபத்திற்கு தள்ளியது. இதற்கு எதிராக அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். இந்த நிலையில்தான் அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் , அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாகவும்.. இது தன்னுடைய கருத்து இல்லை. அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து என்றும் அதிரடியாக கூறினார்.

கூட்டணி முறிவு: ஆனால் இதற்கு பாஜக பெரிதாக எதிர்வினையாற்றவில்லை. இதையடுத்து பாஜக தலைவருக்கு எதிராக புகார் கொடுக்க அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் டெல்லி சென்றனர். அங்கே பாஜக தேசிய தலைவர் நட்டா, பியூஸ் கோயல் ஆகியோரை டெல்லிக்கு சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும்.

அவர் தொடர்ந்து பாஜக தலைவராக நீடித்தால் கூட்டணி தொடர்வது கஷ்டம். முக்கியமாக அதிமுக பாஜக இடையே கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது அண்ணாமலைதான். அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்ல முடியாது. ஆனால் அவரை மாற்றாமல் இருந்தால் கூட்டணியில் நீடிக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

ஆனால் இதை டெல்லி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மூத்த தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அறிவிப்பு: இந்த கூட்டத்தில் அதிமுக -பாஜக கூட்டணி முறிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கள்தான் கூட்டணியின் முறிவிற்கு காரணம். அவர் தொடர்ந்து கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார் என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

அண்ணாமலை பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு காரணம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அண்ணாமலை அவசர பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக மோதல் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+