"கொங்கு".. இங்க அண்ணாமலை.. அங்க மகேந்திரன்.. ஒரே நாளில் ஏகப்பட்ட ட்விஸ்ட்.. "அந்த" கனெக்சன்?!
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து ஏகப்பட்ட திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. திமுக தொடங்கி பாஜக, அதிமுக என்று பல கட்சிகளில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
நேற்று மத்திய அமைச்சரவை மாற்றம் காரணமாக தேசிய அரசியல் மிக சூடாக இருந்தது. முக்கியமாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனதால் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
நேற்றைய பரபரப்பிற்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் இன்றும் அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள், ட்விஸ்ட்கள் நடந்துள்ளது. ஒரே நாளில் அடுத்ததடுத்து சுடசுட பல சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.

என்ன
மக்கள் நீதி மய்யம் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட, அதன் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் இன்று திமுகவில் இணைந்தார். இது எதிர்பார்க்கப்பட்ட இணைப்பு என்றாலும் திமுக அவருக்கு கொடுத்த வரவேற்பு மிக முக்கியமானதாக இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின், மகேந்திரனை தனியாக அழைத்து பேசி, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டா வந்து இருக்கீங்க பாராட்டும் அளவிற்கு இந்த இணைப்பு விழா பிரம்மாண்டமாக இருந்தது.

திமுக
இவர் மட்டும் திமுகவில் இணையாமல் இன்னொரு சர்ப்ரைஸாக மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் உறுப்பினர் பத்ம பிரியாவும் இன்று திமுகவில் இணைந்தார். இவர் திமுகவில் இணைந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒன்று. மநீமவில் இருந்து விலகிய பின் அரசியலில் ஈடுபடுவது சந்தேகமாக இருந்த நிலையில் திடீரென திமுகவில் இணைந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இன்னொரு பக்கம்
இதெல்லாம் போக சம்பந்தமே இன்றி அதிமுக முன்னாள் எம்பி, நெல்லை முன்னாள் மேயர் விஜிலா சதானந்த திமுகவில் இன்று இணைந்து அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். இந்த பக்கம் திமுக இப்படி அதிரடியை நிகழ்த்த இன்னொரு பக்கம் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றுதான் எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆன நிலையில் இன்றே அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராகி உள்ளார்.

ஒரே நாள்
ஒரே நாளில் அடுத்தடுத்து திமுக, பாஜக, அதிமுக என்று அதிரடி திருப்பங்கள் நடந்து உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய கனெக்சன் மகேந்திரன், பதம் பிரியா, அண்ணாமலை மூவரும் அரசியலுக்கு புதியவர்கள். மூன்று பேருமே இளைமையானவர்கள். இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரே நாளில் மாற்றங்கள் அரங்கேறி இருக்கின்றன.

கொங்கு
முக்கியமாக அண்ணாமலை, மகேந்திரன் இருவரும் கொங்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கொங்கு பின்னணி கொண்டவர்கள். கொங்கு மாவட்டங்களில் திமுக வேகமாக வளர முயன்று வருகிறது. இதற்காக மகேந்திரனை திமுக களமிறக்கி உள்ளது. இந்த நிலையில் "அதே" கொங்கு பின்னணி கொண்ட அண்ணாமலையை பாஜக தலைவராக்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழ்நாடு அரசியலில் கொங்கு மாவட்டம் மிக முக்கியமான இடத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
கோவை டு லண்டன் கார் ஓட்டிய மூகாம்பிகா ரத்தினம்! இன்று கமல் ஹாசனின் மநீம விட்டு வெளியேறிய மர்மம் என்ன -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்












Click it and Unblock the Notifications