Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோர்ட் கோர்ட்டா போகப்போறாரு! மோடியையே எதிர்க்கும் அண்ணாமலை! சிபிஐ என்ன பண்ணுது? ஆர்எஸ் பாரதி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவதூறு பரப்பிய அண்ணாமலை கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.

 BJP chief Annamalai will travel court to court for attacking DMK says RS Bharathi in Pressmeet

மேலும் தான் ரபேல் வாட்ச் பில் என்று அண்ணாமலை பில் ஒன்றையும் காட்டி உள்ளார்.

ரபேல் வாட்ச் பில்லை அவர் இப்போது கூட காட்டவில்லை. செய்தியாளர் சந்திப்பில் அவர் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால் இங்கே நான் உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பேன்.

தனது பேட்டியில், அவர் ரபேல் பில்லை காட்டவில்லை.. வெறுமனே சீட்டு ஒன்றை காட்டி உள்ளார். அவர் காட்டியது பில் கிடையாது. ஜெகத்ரட்சகனிடம் இவ்வளவு சொத்து என்று சொல்லி இருக்கிறார். அவர் என்ன பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறாரா? அவர் பல காலமாக தொழில் அதிபர்.

எங்கள் மீது பல புகார்களை வைக்கிறார். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? அந்த ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்களேன்? மோடி, நிர்மலா சீதாராமன் நினைத்தால் இதில் நடவடிக்கை எடுக்கலாமே. அண்ணாமலை என்ன மோடி மீது குற்றச்சாட்டு வைக்கிறாரா? என்ன இது? அவர் இப்படி பேசலாமா?

அவதூறு பரப்பிய அண்ணாமலை கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை புகார் வைத்து இருக்கிறார். 2006-2011 ஆட்சியில் மெட்ரோ பணியில் ஊழல் என்று கூறி உள்ளார். 2014ல் இருந்து மோடி தானே ஆட்சியில் இருக்கிறார்.

பாஜக தானே மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்த காலத்தில் ஏன் மோடி திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை? சிபிஐ ஏன் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வேண்டும் என்றால் நடவடிக்கை எடுத்து இருக்கலாமே?

அப்படி எடுக்க தவறி இருந்தால் மோடி, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை. அவர் மீது கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார்.

 BJP chief Annamalai will travel court to court for attacking DMK says RS Bharathi in Pressmeet

அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது. அவர் எப்படி படித்து பாஸ் ஆனார் என்று தெரியவில்லை. அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள்

தேர்தல் ஆணையத்தில் அவர்கள் சொத்து விவரங்கள் தாக்கல் செய்துள்ளனர். அதை பொய் என்று நிரூபிக்க முடியுமா? ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு புகாரை நாங்கள் நிரூபித்தோம். திமுக மீது சொல்லப்பட்ட ஒரு குற்றச்சாட்டையாவது எவராவது நிரூபித்ததுண்டா?

அவர் ஒன்றும் ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற தலைவர் கிடையாது. நாங்கள் அவர்களையே பார்த்தவர்கள். ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற அறிவு இவருக்கு கிடையாது. மக்கள் ஆதரவும் இவருக்கு கிடையாது, என்று அண்ணாமலைக்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+