‛‛வாரிசு அரசியல் டூ கட்ட பஞ்சாயத்து’’.. DMK, INDIA கூட்டணியை அர்த்தம் கூறி சீண்டிய ஜேபி நட்டா!
சென்னை: சென்னையில் நடந்த ‛என் மண் என் மக்கள்' யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா திமுக மற்றும் ‛இந்தியா' கூட்டணிக்கு கூறிய புதிய அர்த்தத்தால் அந்த கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பரித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் அண்ணாமலை தலைமையில் ‛என் மண் என் மக்கள்' யாத்திரை நடந்து வருகிறது. இன்று 200 வது தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதிக்குள் இந்த யாத்திரை நுழைந்தது.

இதை கொண்டாடும் வகையில் பாஜக யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் துறைமுகம் தொகுதியில் இன்று நடந்தது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற் பேசினார். அப்போது அவர் திமுக மற்றும் ‛இந்தியா' கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதோடு திமுக மற்றும் ‛இந்தியா' கூட்டணியின் பின்னணி பற்றியும், திமுகவின் பெயருக்கு புதிய அர்த்தத்தையும் ஜேபி நட்டா கூறினார். இதுதொடர்பாக ஜேபி நட்டா பேசியதாவது: மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக பொய் சொல்லி கொண்டிருக்கிறது. திமுக வடக்கு-தெற்கு பிரச்சனையை கிளப்பி வருகிறது. மத்திய அரசு இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறது. இதில் தமிழ்நாட்டில் இரண்டரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது.
அதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். இதில் தமிழகத்தில் 78 லட்சம் பேர் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்பெறுகின்றனர். இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தில் 10 கோடி பேரில் தமிழகத்தில் 38 லட்சம் பேர் வழங்கப்பட்டுள்ளனர். அதேபோல் வீடு கட்டும் திட்டத்தில் இந்தியாவில் 4 கோடி வீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 லட்சம் பேருக்கு தமிழகத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக் ஆண்டுக்க 6 ஆயிரம் வழங்கப்படுகிது. மொத்தம் 12 கோடி பேர் பயன்பெறும் நிலையில் தமிழகத்தில் 38 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர்.
DMK என்பதற்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? D என்பது Dynasty. அதாவது வாரிசு அரசியல். M என்பது Money. பணத்தை கொள்ளையடிப்பது. K என்பது Katta Panchayat. தாத்தா, அப்பா, பேரன் என்ற வரிசையில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி உள்ளனர். தமிழகத்தில் ஒரு அமைச்சர் 200 நாட்களுக்க மேலாக சிறையில் உள்ளார். ஆனாலும் இன்னும் அவர் அமைச்சராக தொடர்கிறார். திமுக கட்சி சொன்னதை எதையும் செய்யவில்லை. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. லஞ்சம் எப்படி வாங்குவது என்பது பற்றி தான் அவர்களின் சிந்தனை உள்ளது.
அதேபோல் தான் ‛இந்தியா' கூட்டணி. ஊழல் செய்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ‛இந்தியா' கூட்டணியை ஆரம்பித்துள்ளன. தங்களின் குடும்பத்தை காப்பாற்றவும், லஞ்சம் வாங்கவும், வாங்கிய சொத்துகளை காப்பாற்றவும் தான் இந்த கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளிலும் வாரிசுக்கள் தான் வளர்கின்றனர்.
காஷ்மீரில் பரூக் அப்துல்லா மகன் உமர் அப்துல்லா, உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ், பீகாரில் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யதாக்கரே, சரத் பவார் மகள் சுப்ரியா சுலே மற்றும் அஜித் பவார், தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் மகன் கேடிஆர் மகள் கவிதா, தமிழ்நாட்டில் கருணாநிதி மகன் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என அனைவரும் வாரிசுகளாகவே உள்ளன. அத்தனைக்கும் மேலாக கெஜ்ரிவால் என்னென்ன விஷயங்களை பேசினார். ஆனால் அவரது அமைச்சர் சிறையில் உள்ளார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார். இந்த வேளையில் பாஜகவினர் உற்சாகமாகி ஆர்ப்பரித்தனர்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications