அண்ணாமலை மாதிரி இல்லை.. பாவமன்னிப்பு கிடைக்காது.. அடித்து ஆடும் நயினார்.. செம ட்விஸ்ட்
சென்னை: தமிழக பாஜகவின் தலைவராகியிருக்கும் நயினார் நாகேந்திரன் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
தமிழக பாஜகவின் தலைவராகியிருக்கும் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடப்பட்டு, 17-ந்தேதி சென்னையில் இருந்து அவரது பயணம் தொடங்கியுள்ளது. அதாவது, புதிய தலைவருக்கு வரவேற்பு அளிக்கும் பொதுக்கூட்டமாக இது நடத்தப்படுகிறது. 17-ந்தேதி (நேற்று) சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

நயினார் நாகேந்திரன் தேர்வு
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் துணை மேயரும் பாஜகவின் முக்கிய நிர்வாகியான கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மைக் பிடித்த அவர், ''மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டதுமே, அவரைத் தேடிப் பிடித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். எல்லா அமைச்சர்களும் உங்க (நயினார்) காலில் விழுவார்கள். திமுககாரர்களை மட்டும் நம்பி விடாதீர்கள். அண்ணாமலை போல அவர்களுக்கு (திமுகவினருக்கு) பாவமன்னிப்பு வழங்கக் கூடாது '' என்று நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தும் வகையில் பேசினார்.
திமுகவை அட்டாக் பண்ணி கராத்தே தியாகராஜன் பேசிய பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினரிடம் ஏக உற்சாகத்தை கொடுத்துள்ளது. பாவ மன்னிப்பு வழங்கக்கூடாது என்ற போது ஏக விசில் சத்தமும் கைத் தட்டல் சத்தமும் கூட்டத்தில் ஆர்ப்பரித்துள்ளது. அதே சமயம், கராத்தேவின் இந்த பேச்சு, பல்வேறு தரப்புகளிடம் பகிரப்பட்டுள்ள நிலையில், அவரது பேச்சைக் கண்டு திமுகவில் கொந்தளிப்பு உருவாகி வருகிறது.
முக்கிய நடவடிக்கை
பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியாக எந்த தலைவர் வந்தால் தனக்கு ஏற்ற நிர்வாகிகளை நியமிப்பது வழக்கம். அதாவது கடந்த தலைவர் நியமித்த நிர்வாகிகளை மாற்றுவார்கள். அந்த வகையில் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற உள்ளார்.
அண்ணாமலைக்காக பணியாற்றிய.. கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை கூண்டோடு தூக்கும் திட்டத்தில் நயினார் இருக்கிறாராம். அதோடு ஜாதி ரீதியாக பரவலாக பல தரப்பினருக்கு பதவி வழங்கவும் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம். ஒரு சிலர் இன்னமும் முன்னாள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதால் அவர்களை தூக்கும் திட்டத்திலும் நயினார் இருக்கிறாராம்.
சென்னையில் ரவுடிகள் பலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் உள்ளன. இதை கணக்கெடுப்பு மேற்கொண்டு சரி செய்ய.. பலரை நீக்கவும் நயினார் திட்டமிட்டு உள்ளாராம். பாஜகவின் பல வருட திட்டம் பூத் கமிட்டி அமைப்பது. அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2026 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம். இதை மனதில் வைத்தே கட்சியில் நிர்வாகிகள் குழு, மாவட்ட தலைவர்கள் குழு விரைவில் கூண்டோடு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதை எல்லாம் மே இறுதிக்குள் செய்யும் திட்டத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளார் என்று பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications