சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. தமிழிசைக்கு இவ்வளவு ஆதரவா.. தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் தற்போதைய பெண் அரசியல்வாதிகளில் யார் அதிரடி, சரவெடி? என்ற கருத்துக்கேட்பு கேள்விக்கு, ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் அசத்தலான, சுவாரசியமான பதிலை அளித்துள்ளனர்.

2018ம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இந்த ஓராண்டில் தமிழகத்தில் எத்தனையோ அரசியல் மாற்றங்களை பார்த்திருப்பீர்கள். பல அரசியல் ஸ்டன்டுகளையும் கவனித்திருப்பீர்கள்.

இதில் தினமும் செய்திகளை ஆக்கிரமித்து அதிரடி காட்டியதில் ஆண் அரசியல் தலைவர்களுக்கு ஈடாகக பெண்களும் உண்டு. அப்படியானவர்களில் யார் அதிரடி, சரவெடி என்பதை கேள்வியாக முன் வைத்தோம்.

தாமரை மலருமோ

தாமரை மலருமோ

என்னதான் சொல்லுங்க, பாஜக தமிழக தலைவர் தமிழிசைதாங்க அதிரடி, சரவெடி என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர் நமது வாசகர்கள். அட ஆமாங்க.. ஏறத்தாழ பாதி பேர்.. உண்மைதான், ஏறத்தாழ வாக்களித்ததில் பாதி பேர் தமிழிசைக்குதான் தங்கள் பொன்னான வாக்குகளை அளித்துள்ளனர். 47.06 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். அட.. ஒருவேளை தமிழிசை சொல்வதை போல தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

கனிமொழிக்கு 3வது இடம்

கனிமொழிக்கு 3வது இடம்

இந்த பட்டியலில் 3வது இடம், திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கு. 16.94 சதவீதம் பேர், கனிமொழிதான் அதிரடி, சரவெடி என கூறியுள்ளனர். நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான, குஷ்புவிற்கு ஆதரவாக 7.95 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

சி.ஆர்.சரஸ்வதி

சி.ஆர்.சரஸ்வதி

சசிகலா, டிடிவி தினகரன் அணியின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பிரச்சார பீரங்கி, சி.ஆர்.சரஸ்வதிக்கு ஆதரவாக 2.52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதிமுகவின் நிர்மலா பெரியசாமிக்கு, 1.18 சதவீதம் பேரும், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு 2.85 சதவீதம் பேரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அடடே பிரேமலதா

அடடே பிரேமலதா

இதில் சர்ப்ரைஸ் என்றால் தேமுதிக பிரேமலதாதான். அவருக்கு ஆதரவாக 17.99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். கனிமொழியைவிட சற்று அதிகம். எனவே பட்டியலில் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார், இந்த பெண் அரசியல்வாதி. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் லேசுப்பட்டவர் இல்லை. 3.52 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

English summary
Oneindia Tamil readers says BJP chief Tamilisai is the best politicians among women, Premalatha Vijayakanth gets second place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X