கோடிகளில் கொட்டி கொடுத்த மோடி! பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் காங்.,! திமுக என்ன சும்மாவா? மிரண்ட கூகுள்
சென்னை: மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரச்சாரத்தின் மறுவடிவமான டிஜிட்டல் பிரச்சாரத்திலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் பாஜக கோடிக்கணக்கில் கூகுளுக்கு மட்டும் விளம்பரத்திற்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சம் இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா காங்கிரஸின் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், அந்தந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
டிஜிட்டல் விளம்பரம்: டிஜிட்டல் உலகில் டிஜிட்டல் பிரச்சாரமும் பெரிய அளவில் அரசியல் கட்சிகளுக்கு கை கொடுக்கிறது. google, facebook, youtube உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் கொடுக்க அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகினர். அந்த வகையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 80,000க்கும் மேற்பட்ட விளம்பரங்களை கொடுத்திருக்கிறது பாஜக அது மட்டுமில்லாமல் கூகுளுக்கு மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விளம்பரங்களை பாஜக அளித்திருக்கிறது. இந்தியாவிலேயே பாஜக தரப்பில் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களுக்கு அதிக அளவில் விளம்பரம் தரப்பட்டிருக்கிறது. 'மோடியின் கேரன்டி' என்ற தலைப்பில் டிஜிட்டல் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 80667 விளம்பரங்களை பாஜக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாஜக முதலிடம்: கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் மட்டுமே மூன்று மாத காலகட்டங்களில் 39.41 கோடி ரூபாய் பாஜகவால் செலவிடப்பட்டு இருக்கிறது. உத்தரப்பிரதேசம் ஒடிசா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு கோடி ரூபாய் வீதமும், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 3.8 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் விளம்பரம்: மட்டுமில்லாமல் 2018 ஆம் ஆண்டிலிருந்து பாஜக அதிக அளவில் கூகுளில் விளம்பரம் கொடுத்திருக்கிறது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்கள் நிறுவனத்திற்கு எவ்வளவு விளம்பரங்கள் கொடுத்திருக்கிறது என்பது குறித்து கூகுள் வெளியிட்டிருந்தது. அதன்படி கடந்த ஆறு வருடங்களில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் கூகுள் நிறுவனத்திற்கு 390 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் அளித்து இருக்கின்றன.
பாஜக 100 கோடி: அதில் பாஜக மட்டும் 2018 மே மாதம் 31ஆம் தேதி முதல் கடந்த வாரம் வரை விளம்பரம் செய்வதற்கு 100 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இதன் மூலம் கூகுளில் 100 கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுத்த முதல் இந்திய அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் பிரதான தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இருக்கிறது. அந்த கட்சி கடந்த ஆறு ஆண்டுகளில் கூகுள் விளம்பரத்திற்கு 45 கோடி செலவு செய்துள்ளது.
திமுக 3ஆம் இடம்: பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக இருக்கிறது. திமுக மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் 42 கோடி ரூபாய்க்கு கூகுளில் விளம்பரம் செய்திருக்கிறது. இது காங்கிரசை விட மூன்று கோடி ரூபாய் மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா கேரளாவிலும் திமுக விளம்பரம் செய்துள்ளது. அதில் கர்நாடகாவில் 14 கோடியும் கேரளாவில் 13 கோடியும் திமுக விளம்பரத்திற்காக கொடுத்துள்ளது. கூகுளில் தமிழ்நாட்டை குறி வைத்தே அதிக விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications