தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்.. ஜவாஹிருல்லா கண்டனம்.. காவல்துறைக்கு கோரிக்கை
சென்னை: தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரை பற்றி தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பதவினை பாஜக நீக்கியது.

இந்நிலையில் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த டிவிட்டர் பதிவு உள்ளதாக ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
இந்த பதிவுக்குக் காரணமாக இருந்த தமிழக பாஜக மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications