சிங்கம்பட்டி மன்னரின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த வேண்டும்.. பாஜக கோரிக்கை
சென்னை: இந்தியாவின் கடைசி மன்னர் என்ற முறையில் சிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Recommended Video
பாஜக மாநில தலைவர் எல் முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மன்னர் ஆட்சி முறையில் இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி மன்னர், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கம்பட்டி ஜமீன் அரசர்.

விடுதலைக்குப் போராடிய வீரப் பேரரசி வேலுநாச்சியார் மற்றும் விவேகானந்த சுவாமியை சிக்காகோ அனுப்பிய இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி ஆகியோருக்கு நேரடி உறவுக்காரர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியை காக்கும் பொறுப்பு ராமநாதபுரம் ராஜாவுக்கு உண்டு. அதனால் அவர் சேதுபதி. அதுபோல் தாமிரபரணி ஆற்றின் புனிதத் தலங்களை காக்கும் இவர் தீர்த்தபதி.
இந்தியாவின் கடைசி மன்னர் என்ற முறையில் அவரது
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 25, 2020
இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த
வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் - மாநில தலைவர் டாக்டர் முருகன்@Murugan_TNBJP@CMOTamilNadu pic.twitter.com/FB8eWsyXKL
அரும் பெரும் சிந்தனையாளர், கொடையாளர், மிகுந்த ஆங்கிலப் புலமை மிக்கவர். தமிழுக்கு சைவத்துக்கும் பாடுபட்டவர், அனைத்து ஆன்மீக சமூக இயக்கங்களுக்கும் துணை நின்றவர் இங்கிலாந்தில் பயின்றவர் மேற்கு தொடர்ச்சி மலையின் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலத்திற்கு உரிமையாளர்.
பல இலட்சம் மக்கள் கூடும் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலின் பரம்பரை அறக்காவலர் சாதி மத இன வேறுபாடு பார்க்காமல் அனைவரிடத்தும் அன்புடன் பழகி வந்தார். அன்னாரின் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் தம் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் கடைசி மன்னர் என்ற முறையில் அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications