ஒரு சட்டமன்ற தொகுதியில் கூட மேல வரல.. பாஜக எம்.எல்.ஏ உள்ள தொகுதிகளிலேயே இதுதான் நிலைமை! இதோ டேட்டா!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் பாஜக தோல்வியைச் சந்தித்த நிலையில், சட்டசபை தொகுதி வாரியாக அலசிப் பார்த்தால் 234 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிக வாக்குகளைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. எனினும், இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பாஜக. இந்தியா கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், 40 தொகுதிகளிலுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. இதில் அதிமுக கூட்டணி 11 இடங்களிலும், பாஜக கூட்டணி 22 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது.
அதிமுக, பாஜக வாஷ் அவுட்: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி, மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. 13 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே மற்ற கட்சிகள் முதலிடம் பிடித்துள்ளன. பாஜக ஒரு சட்டசபை தொகுதியில் கூட அதிக வாக்குகளைப் பெறவில்லை.
32 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 192 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணியே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
பாஜக ஒரு இடத்தில் கூட: 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பெற்றுள்ள நிலையில், 8 சட்டசபை தொகுதிகளில் அதிமுக, 3 சட்டசபை தொகுதிகளில் பாமக, 2 சட்டசபை தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை.
கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கடந்த 2021 சட்டசபை தேர்தல்களில் இந்த 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ உள்ள இந்த 4 இடங்களிலும் கூட பாஜகவால் முதலிடம் பிடிக்க முடியவில்லை.
சிட்டிங் எம்.எல்.ஏ உள்ள தொகுதியிலும் பாஜக அவுட்: கோவை லோக்சபா தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு 1.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கோவை தெற்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக பாஜகவின் வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். அங்கும் கூட, அண்ணாமலையை விட கணபதி ராஜ்குமார் சுமார் 8,500 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள 8 சட்டசபை தொகுதிகள்: எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
பாமக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள 3 சட்டசபை தொகுதிகள்: பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி
தேமுதிக அதிக வாக்குகளைப் பெற்றுள்ள 2 சட்டசபை தொகுதிகள்: திருமங்கலம், அருப்புக்கோட்டை.
வளர்ச்சியா?: தமிழ்நாட்டில் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ள தொகுதிகள் உட்பட ஒரு தொகுதியில் கூட பாஜக முதலிடம் பிடிக்க முடியாததன் மூலம், கடந்த 2021 தேர்தலில், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் மூலமாகவே பாஜக 4 இடங்களை வென்றுள்ளது, கூட்டணி இல்லையென்றால் இன்றைக்கு பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இருக்க மாட்டார்கள் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனி அணியாகப் போட்டியிட்ட பாஜக கடந்த கால தேர்தல்களைவிட சிறப்பான ஒரு வாக்கு சதவீதத்தைப் பெற்று, வாக்கு வங்கியை வலுப்படுத்தியுள்ளதாகவும், அதிமுகவை பல இடங்களில் பாஜக பின்னுக்குத் தள்ளியுள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். எனினும், சட்டசபை தொகுதி வாரியான புள்ளி விவரங்கள் பாஜக செல்வாக்கு அதிகரிக்கவில்லை என்பதையே காட்டுகின்றன.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications