ரீல்ஸ் அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக.. திமுகவை அல்லோகலப்படுத்தும் "தாமரை" யுக்தி.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமான இன்ஸ்டாகிராம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களை மாற்றியதில் பாஜகவிற்கு பெரிய பங்கு உண்டு. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தும் வழக்கம் பாஜக மூலமே பிரபலம் ஆனது.

BJP doing heavy Instragram reels campaign against DMK ahead of Lok Sabha elections

இந்த நிலையில்தான் இந்த முறை லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் 25 தொகுதியில் பாஜக போட்டி போடும் என்று திட்டமிட்டுள்ளதாம். நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இதை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும். கண்டிப்பாக இந்த முறை பாஜக மாபெரும் வெற்றியை பதிவு செய்யும். நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என்று அறிவித்துள்ளார்.

கூட்டணி; மத்தியில் ஆளும் பாஜக தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணியை அறிவிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. கூட்டணி தொடர்பான முடிவுகள் எதையும் பாஜக இன்னும் எடுக்கவில்லை. ஐஜேகே போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் இதுவரை இணைந்துள்ளது.

இது போக பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதில் அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 5 லோக்சபா சீட் என்று பாமக கேட்டுள்ளதாம்.

இதையடுத்து பாமக இறங்கி வந்து 7 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 7 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

இன்ஸ்டாகிராம் பிரச்சாரம்; இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமான இன்ஸ்டாகிராம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஆளும் திமுகவிற்கு எதிராக பாஜக சார்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தீவிரமான ஐடி விங் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், மீம் வீடியோ, டிரெண்டிங் விஷயங்களை வைத்து திமுகவை கிண்டல் செய்வது என்று பாஜக டிரெண்டு செய்து கொண்டு இருக்கிறது. உதாரணமாக டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு உதவிய அதே டெக்னாலஜியை பாஜக தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக கையில் எடுத்துள்ளது.

உதாரணமாக இன்று ஆளும் திமுகவையும் - போதை பொருள் விவகாரத்தில் சாதிக் தேடப்படுவதையும் தொடர்புபடுத்தி மீம்ஸ் போட்டுள்ளனர். அதேபோல் மோடியை புகழும் வகையில் வித்தியாசமான டிரெண்டிங் வீடியோக்கள் என்று பாஜக அடித்து ஆடுகிறது.

நேற்று கூட திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கிண்டல் செய்து டிரெண்டிங் ரீல்ஸ்களை போஸ்ட் செய்து வருகின்றனர். முக்கியமாக இளைஞர்கள் பலரும் ரீல்ஸுக்கு அடிமையாகி உள்ள நிலையில் அதில் பாஜக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் திமுகவோ இதற்கான பதிலடியை கொடுக்க தொடங்கவில்லை. இளைஞர்களை களமிறக்கி டிரெண்டிங் விஷயங்களை பிடித்து பாஜக சமூக வலைத்தளங்களில் திமுகவை லீடு எடுக்க தொடங்கி உள்ளது. திமுக ஐடி சுதாரிக்குமா.. என்ன பதிலடி கொடுக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+