காவிரி விவகாரத்தில் பாஜக டபுள் கேம்.. போட்டோவுடன் போட்டுடைத்த மாணிக்கம் தாகூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நீர் விவகாரம் தமிழக, கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழகத்திலும், தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடத்தியது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது என்று போராடும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்களை எதிர்க்க தைரியம் இருக்கிறதா என நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவும் கர்நாடகா மறுத்து வருகிறது. முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லவிருந்த நிலையில், சூழல் சரியில்லாததால் விஜய் வரவேண்டாம் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவக்குமார் கூறியுள்ளார். தமிழக முதல்வரை, கர்நாடகா அரசு அவமதித்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.

Manickam Tagore

பாஜகவை எதிர்க்க தைரியம் இருக்கா

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே. ஒருவேளை பார்க்க மறந்துவிட்டீர்கள் என்றால், இதோ இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ட்விட்டர் பக்கங்களைச் (Twitter handles) சற்று பாருங்கள்.

காவிரி உரிமையில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடும் எடியூரப்பாவையும், கர்நாடக பாஜகவையும் எதிர்க்க உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடுவது, டெல்லியில் மோடி அரசு மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பது, தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் மீது பழியைப் போடுவது - இதுதான் பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேடம்!

காங்கிரஸ்க்கு கேள்வி

உங்கள் இந்தப் பொய் நாடகத்தையும் போலி அரசியலையும் தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள் என கூறியுள்ளார். அவரின் பதிவை காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு பாஜகவினர், தமிழகத்திற்கு தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்ப்பதற்கு மாணிக்கம் தாகூருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் தைரியம் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+