தமிழகத்தில் பூரண மதுவிலக்கு.. பஞ்சமி நிலம் மீட்பு.. ப்ரீலைசென்ஸ் . பாஜக தேர்தல் அறிக்கை
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும், ,18 வயது முதல் 23 வயது வரை உள்ள பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் இலவசம் என்றும் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு பட்டியலின மக்களுக்கு ஒப்படைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம்.
50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் வருடாந்தர உதவித்தொகை ₹6000 வழங்கப்படும்
தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்
தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும்
இந்து கோயில்ககள்
மதசார்பற்ற அரசு இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, இந்து கோயில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், இந்து சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
பூரணமதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.
18 முதல் 23 வயது வரை உள்ள பெண்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
8ம் வகுப்பு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவமாக டேப்லெட் வழங்கப்படும்

வீடு தேடி ரேசன் பொருள்
மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு குடியுரிமை பொருட்கள் இல்லம் தோறும் நேரடியாக வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் நிறுவப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்கப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும்.

சட்டமேலவை மீண்டும்
நிலத்தடி நீர் மட்டம் உயரவும், ஆறுகளில் நீர்மட்டம் சீராக இருக்கவும் முற்றிலுமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு தேவையான மணல் இறக்குமதி செய்யப்படும்.
சென்னை மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படும்.
சட்டங்களை விவாதிக்கும் விஷயத்தில் அறிவார்ந்த பல்வேறு துறைகளின் நிபுணர்களடங்கிய சட்டமேலவை பயனுள்ளதாக இருப்பதால் சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும்.

பெண்குழந்தை
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் வைப்பு நிதி
அதிகமான நிதி ஒதுக்கீட்டுடன் விவசாயிகளுக்கு என தனிபட்ஜெட் போடப்படும்.
விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்: விலை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய 'விலை நிர்ணயக் குழு' தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் கீழ் 'விவசாய நீர் பாசன துறை' உருவாக்கப்படும்.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500 ஆக நிர்ணயம்.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications