திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழக பாஜக சார்பாக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய 3 பண்டிகைகளின் போதும் 3 எல்பிஜி சிலிண்டர் இலவசமாக அளிக்கப்படும் என்றும், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழக பாஜக சார்பாக அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஜேபி நட்டா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தமிழிசை செளந்தரராஜன் தலைமையிலான குழுவினர் இந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்திருக்கின்றனர்.

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், ஆண்டுக்கு 3 எல்பிஜி சிலிண்டர், குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 3 இலவச சிலிண்டர்கள் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளின் போது அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தைப்பூரம் மாநில விழாவாக அறிவிக்கப்படும் என்றும், திருப்பரங்குன்றத்தில் பழமையான தீபம் ஏற்றும் வழக்கம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தமிழ்நாட்டில் 10 நகரங்கள் டாப் 100 குப்பையில்லா நகரங்கள் பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மூத்த குடிமக்களுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் மொத்தமாக 27 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நகல் எடுத்துள்ள தமிழக பாஜக, திருப்பரங்குன்றம் விவகாரத்தை அப்படியே சேர்த்திருக்கிறது.
ஏற்கனவே அதிமுக தரப்பில் ஒரேயொரு இஸ்லாமிய வேட்பாளருக்கு தான் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், சிறுபான்மை சமூக மக்கள் பலரும் திமுக கூட்டணி பக்கம் சாய்ந்துள்ளனர். இப்படியான சூழலில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications