அண்ணாமலை எதிர்காலம் என்ன? காத்திருக்கும் டெல்லி போஸ்ட்.. அமித் ஷாவே சொன்ன தகவல்.. ட்விஸ்ட்
சென்னை: பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் அறிவு தேசிய பணிகளை கவனித்துக்கொள்வதற்காக பயன்படுத்திக்கொள்ளப்படும் என்று பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே பாஜக கட்சி இதுவரை பெற்றுள்ளது. தமிழ்நாடு பாஜக பிரிவு தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றதிலும் சரி அல்லது கட்சியின் நிகழ்ச்சிகளை கிராமம் கிராமமாக கொண்டு சென்றதிலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்வோம். தேசிய அளவில் அவரை பயன்படுத்திக்கொள்வோம் என்று அமித் ஷா கூறி உள்ளார். இதன் மூலம் தேசிய பணிக்கு அண்ணாமலை செல்வதை அமித் ஷா உறுதி செய்துள்ளார்.
அண்ணாமலை பதவி காலி
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அவர் போட்டியின்றி அண்ணாமலை இடத்தை நிரப்ப உள்ளார். பாஜக மாநில தலைவர் ஆக 10 வருடம் கட்சியில் இருக்க வேண்டும். ஆனாலும் அது அடையாள விதிதான் கட்டாய விதி கிடையாது. இந்த நிலையில் அண்ணாமலை நீக்கப்பட்டு 8 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்கும் நயினார் அந்த இடத்தை பிடித்து உள்ளார்.
2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
ஒரே ஜாதி
அண்ணாமலை இருந்தால் அதிமுக - பாஜக கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம், என்று இவர்கள் பேசி உள்ளனர். இதையடுத்தே பாஜக தலைவர் பதவி அண்ணாமலையிடம் இருந்து நயினார் நாகேந்திரனுக்கு மாற்றப்பட்டதாக பாஜக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்..












Click it and Unblock the Notifications