"டிரைவர் அங்கிள் பேட் டச் பண்றாரு”.. பள்ளி சிறுமியிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகியை தூக்கிய போலீசார்!
சென்னை: பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரான பாஜக பிரமுகரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமி, 'டிரைவர் அங்கிள் பேட் டச்' செய்வதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் கேமரா பொருத்தி, டிரைவரின் நடவடிக்கையைக் கண்காணித்து கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
சென்னை திருமங்கலத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். சிறிது தொலைவில் இருந்து வரும் மாணவ - மாணவிகள் பள்ளி வேனில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியும் இவ்வாறு வேனில் சென்று வந்து கொண்டிருந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பள்ளி வேன் டிரைவர் ரமேஷ் (40) என்பவர் அந்தச் சிறுமியிடம் நெருக்கமாக நடந்து வந்துள்ளார். அந்தக் குறிப்பிட்ட சிறுமியிடம் சிரித்து பேசுவதும், வேனில் செல்லும் போது சிறுமியை அருகில் அமர வைத்துக் கொள்வதுமாக அவர் நடந்து வந்திருக்கிறார். அந்தப் பச்சிளம் சிறுமி, டிரைவரின் நோக்கத்தை உணராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் வேன் டிரைவர் ரமேஷ் ஈடுபடத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே பள்ளியில் குட் டச், பேட் டச் பற்றி ஆசிரியைகள் சொல்லி தந்திருப்பதால் ரமேஷின் தவறான தொடுதல் 'பேட் டச்' என்பதை சிறுமி உணர்ந்து, தனது பெற்றோரிடம் "டிரைவர் அங்கிள் பேட் டச் செய்கிறார்" எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமியின் பெற்றோர், வேன் டிரைவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, வேன் டிரைவர் ரமேஷுக்கு தெரியாமலேயே சிறிய வீடியோ கேமராவை வேனில் பொருத்தி, டிரைவரின் செயலை கண்காணித்துள்ளனர். அப்போது அந்தச் சிறுமியிடம் டிரைவர் ரமேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை உறுதி செய்த அவர்கள், வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் வேன் டிரைவர் ரமேஷை போலீசார் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் பல பள்ளிச் சிறுமிகளுக்கும், பள்ளி வேன் டிரைவர் ரமேஷ், பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த டிரைவர் ரமேஷ், பாஜகவின் அம்பத்தூர் 90-வது வார்டு தலைவராக இருப்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!











Click it and Unblock the Notifications