கேடுகெட்ட பொறுக்கித்தனம்.. ஊருக்கு உபதேசம் சொல்ல வெட்கமா இல்லையா? திமுகவை விளாசிய பாஜக சூர்யா!
சென்னை : கேடுகெட்ட, பணவெறி பிடித்த திமுகவினர் தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றனர் என்பதை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழகம் வருங்காலத்தில் வாழ தகுதியற்ற இடமாக மாறி விடும் என பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்பாடு கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத பார் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு நாள் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்ப்ட்டு வந்த நிலையில், பொதுமக்கள் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.
அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கள்ள சரக்கு விற்கும் மதியழகன் எனும் தி.மு.க பொறுக்கி அமைச்சர் பெயரை சொல்லி காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறான், செருப்பை எடுத்து காவல் அதிகாரியை அடிக்கிறான். இந்த லட்சணத்தில் கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு, கூச்சமின்றி ஊருக்கு உபதேசம் சொல்ல… pic.twitter.com/vcROWhEAMH
— SG Suryah (@SuryahSG) June 7, 2023
இதையடுத்து ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி, போலீசாரை விசாரிக்க உத்தவிட்டுள்ளார். அங்கு சென்ற போலீசார், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கு வந்த திமுக பிரமுகர் மதியழகன் என்பவர், சட்டவிரோதமாக மதுவிற்றவரை போலீசாரின் பிடியில் இருந்து விடுவிக்க முயன்றுள்ளார்.
போலீசாரிடம் கடுமையாகப் பேசி, செருப்பைக் கழற்றி அடிக்கவும் முயன்றுள்ளார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், திமுக பிரமுகரின் செயலுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, "அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கள்ள சரக்கு விற்கும் மதியழகன் எனும் திமுக பொறுக்கி, அமைச்சர் பெயரை சொல்லி காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறான், செருப்பை எடுத்து காவல் அதிகாரியை அடிக்கிறான்.
இந்த லட்சணத்தில் கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு, கூச்சமின்றி ஊருக்கு உபதேசம் சொல்ல வெட்கமாக இல்லையா தமிழக முதல்வரே மு.க.ஸ்டாலின், இந்த திமுக பொறுக்கி மீது நடவடிக்கை எடுக்க திராணி இருக்கிறதா திமுக அரசு? எப்பேர்ப்பட்ட கேடுகெட்ட பண வெறி பிடித்த திமுக மூடர்கள் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர் என்பதை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழகம் வருங்காலத்தில் வாழ தகுதியற்ற இடமாக மாறி விடும்.

இதுபோன்ற கேடுகெட்ட பொறுக்கி திமுக ரவுடி கும்பலுக்கு சேவகம் செய்வதை தமிழ்நாடு காவல்துறை தயவு செய்து விட்டுவிட்டு, மக்கள் பக்கம் நிற்க வேண்டும். வரலாறு பார்த்திடாத அதர்மத்துக்கு துணை போய் தூக்கத்தை இழக்காதீர்கள்." எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications