Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் சேர்ந்த ரவுடி டோக்கன் ராஜா கைது.. ராமஜெயம் கொலையாளியை நெருங்குகிறதா போலீஸ்? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல கூலிப்படை கும்பலின் தலைவன் சிடி மணியின் நண்பரும் பாஜகவை சேர்ந்தவருமான டோக்கன் ராஜாவை போலீசார் கைது செய்து உள்ளனர். ராமஜெயம் கொலையில் சிடி மணிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் டோக்கன் ராஜா கைது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்நாட்டில் ரவுடிகள், கூலிப்படை கும்பலின் கொட்டத்தை அடக்கும் வகையில் காவல் துறை பல்வேறு வியூகங்களை வகுத்து அடுத்தடுத்து ரவுடிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல ரவுடி பினு கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையின் மற்றுமொரு பெரிய கூலிப்படை தலைவனான சிடி மணி போலீஸ் வகையில் சிக்காமல் நழுவினார்.

சிடி மணி

சிடி மணி

தொடர்ந்து போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி காட்டி வந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியை, கடந்த 2021 ஆம் ஆண்டு போலீசார் ஸ்கெட்சு போட்டு தூக்கினர். சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த சிடி மனி எனப்படும் மணிகண்டன், தமிழ்நாடு அளவில் பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த திண்டுக்கல் பாண்டியின் சிஸ்யனாக இருந்து அவரது மரணத்துக்கு பிறகு மிகப்பெரிய ரவுடியாக உருவெடுத்தார்.

 ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிடி மணிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அவரிடம் ராமஜெயம் கொலை தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 9 ஆண்டுகளாக கொலையாளி யார், கொல்லப்பட்ட நோக்கம் எதும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராமஜெயம் கொலை வழக்கை தீவிரமாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கி உள்ளார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராமஜெயம் கொலை வழக்கை தீவிரமாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கி உள்ளார்கள்.

உண்மை கண்டறியும் சோதனை

உண்மை கண்டறியும் சோதனை

ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், சாமி ரவி, மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தினேஷ், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரிடம் திருச்சி அரசு மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

டோக்கன் ராஜா கைது

டோக்கன் ராஜா கைது

இந்த நிலையில் சிடி மணியின் நெருங்கிய நண்பரான டோக்கன் ராஜாவை இன்று சென்னை போலீசார் கைது செய்து உள்ளார்கள். சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த டோக்கன் ராஜாவை துறைப்பாக்கத்தில் வைத்து போலீசார் கைது செய்து உள்ளார்கள். கைது செய்யப்பட்ட டோக்கன் ராஜா மீது 25 க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

25 வழக்குகள் நிலுவை

25 வழக்குகள் நிலுவை

இதில் ஏதாவது ஒரு வழக்கில் டோக்கன் ராஜாவை கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவரை கைதுக்கான தெளிவான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட டோக்கன் ராஜா கடந்த ஓராண்டுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

அவருக்கு பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவை சேட்ந்த இவரை போலீசார் கைது செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள பிரபல ரவுடிகள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

பாஜகவில் ரவுடிகள்

பாஜகவில் ரவுடிகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளான கல்வெட்டு ரவி, புளியந்தோப்பு தாதா அஞ்சலை, நெற்குன்றம் சூரியா, பாம் வேலு, குரங்கு ஆனந்த், சீர்காழி சத்யா, புதுவை எழிலரசி, புதுவை சோழன், புதுவை விக்கி என பலர் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக இணைக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியில் அடுத்தடுத்து ரவுடிகளையும், குற்றப் பின்னணி கொண்டவர்களையும் சேர்ப்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்தும் வந்த நிலையில், பாஜக மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக இருக்கும் ரவுடி டோக்கன் ராஜாவை போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ராமஜெயம் கொலை தொடர்பாக சிடி மணிக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் டோக்கன் ராஜா கைது முக்கியத்துவம் பெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+