Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் சில நாட்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒருவழியாக முடிவடைந்தது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, கடந்த 2021 தேர்தலில் அதிமுகவிடம் வெறும் 20 தொகுதிகள் பெற்றிருந்த பாஜக இந்த முறை 27 தொகுதிகளைப் பெற்றிருப்பது அரசியல் ரீதியாக முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் எதிர்பார்த்த அளவுக்கு குறைவான தொகுதிகள் கிடைத்ததாக பேசப்பட்டாலும், மறுபக்கம் கடந்த முறை பெற்றதை விட அதிகமான தொகுதிகள் கிடைத்திருப்பதால் உற்சாகத்தில் உள்ளனர் பாஜகவினர்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நீண்ட நாட்களாக இழுபறி நிலவியது. குறிப்பாக பாஜக ஆரம்பத்தில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்த்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Edappadi Palaniswami bjp

பின்னர் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற கணக்கில் 39 தொகுதிகள் கோரப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் கூட்டணி தலைமையிலான எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்காததால், பாஜக தனது கோரிக்கையை படிப்படியாக குறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணி

இறுதியில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 27 தொகுதிகளில் போட்டியிட பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணி தொகுதிப் பங்கீட்டை ஒரே நாளில் முடித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

பாஜக 27 தொகுதி

அதே நேரத்தில் தேர்தலுக்கு தேர்தல் பாஜக சீட் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் பார்க்க வேண்டும். பாஜகவின் தமிழக அரசியல் பயணத்தைப் பார்க்கும்போது, 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டபோதும், பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி பெற முடியாமல் இருந்தது.

பாஜக சீட் உயர்வு

இந்த நிலைமையில், 2021ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இணைந்த பாஜக, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டமன்றத்தில் கால் பதித்தது. அந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. இதுவே தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்பட்டது. மேலும், நரேந்திர மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு மத்திய ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்திலும் பாஜக வலுவாக காலூன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி

குறிப்பாக மாஜி ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக இல்லாமல் தனித்த கூட்டணியாக களம் கண்ட பாஜக, சுமார் 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதில் பாஜக தனியாக சுமார் 11 சதவீத வாக்குகளை பெற்றது.

தொகுதி பங்கீடு

இந்த வாக்கு சதவீத உயர்வே, 2026 தேர்தலில் அதிக தொகுதிகளை கோர பாஜகவுக்கு தைரியம் அளித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் 2021 தேர்தலில் பாஜக இன்னொரு திட்டத்தையும் கையில் வைத்திருந்தது. அதிமுகவுக்கு 160க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கி, மீதமுள்ள அனைத்தையும் பாஜகவுக்கு வழங்கி, பின்னர் பாஜக மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பகிர்ந்தளிக்க திட்டமிட்டது பாஜக.

பாஜக முன்னேற்றம்

ஒருவேளை அப்படி நடந்தால் பாஜக தான் தலைமை என்பது போன்ற தோற்றம் உருவாகும் என்பதால், அச்சப்பட்ட அதிமுக அந்த திட்டத்தை நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,
இப்போது பாஜக பெற்றுள்ள 27 தொகுதிகளில், கட்சிக்கு சாதகமான பகுதிகளைப் பெற உத்தரவாதம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சுமார் 20 முக்கிய 'நட்சத்திர வேட்பாளர்களை' களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பாஜக டெல்லி தலைமை

இதன் மூலம் குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு தமிழக பாஜகவுக்கு தேசிய தலைமையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் பார்த்தால், பாஜக எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும், கடந்த தேர்தலை விட அதிகமான தொகுதிகளைப் பெற்றிருப்பது அரசியல் ரீதியாக ஒரு முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+