எடப்பாடி மீது பாஜகவுக்கு டவுட்.. செங்கோட்டையனை அமித்ஷா சந்தித்தது ஏன்? புட்டு புட்டு வைத்த பிரியன்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்து விடுவாரோ என்ற பயம் பாஜகவுக்கு இருக்கிறது எனவும், 150 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த ஆதரவை ஒரே வாரத்தில் விஜய் காலி செய்து விட்டதாக கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான பிரியன்.
ஒன் இந்தியா அரசியலுக்கு சிறப்புப் பேட்டி அளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற யாருக்கும் இடமில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். குறிப்பாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்துக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக டெல்லி தரப்பிடம் கூறி இருக்கிறார்.
அதே நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை வேறு எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய பாதிப் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தாலும் கூட்டணி பலமாக இல்லை என்பது மற்றவர்களின் கருத்தாக இருக்கிறது.

ப்ரியன் பேட்டி
அதிமுகவும் பலமின்றி இருக்கிறது. பிரிந்து சென்றவர்களை சேர்த்தால் தான் பலம் கிடைக்கும் எனவும் எடப்பாடியிடம் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். திமுக இல்லை என்றால் அதிமுக வேண்டும். அந்த அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணம். அதற்காக ஒருங்கிணைந்த அதிமுக என சிலர் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக குரல் எழுப்பிய செங்கோட்டையன் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி தலைமைக்கு கெடு விதிப்பதை எந்தத் தலைமையும் ஏற்றுக் கொள்ளாது. அதனால்தான் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.
பாஜக அதிமுக கூட்டணி
செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்பட்டாலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது. அதனால்தான் அவசர அவசரமாகத் துணை குடியரசுத் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்தார். ஆனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதியாகப் பேசியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி
காரணம் அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் அது தனது பதவிக்குத்தான் ஆபத்து. தேர்தலில் தோல்வியடைந்தால் விமர்சனங்கள் வரும் என்பது தெரிந்தாலும் தனது பதவியை விட்டுத்தர எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. அதே நேரத்தில் பாஜகவும் எடப்பாடி பழனிசாமியை ஒரு சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கிறது. ஒருவேளை விஜய்யுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து விடுவாரோ என பாஜக நினைக்கிறது.
பாஜக
அதனால்தான் பிற கட்சிகளையும் முன்னாள் அதிமுகவினரையும் பகைத்துக்கொள்ள பாஜக விரும்பவில்லை. அதே நேரத்தில் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களைச் சேர்க்கவில்லை என்றாலும் என்டிஏ கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். அதே நேரத்தில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை கட்சியில் சேர்த்தால் தனது பதவிக்கு ஆபத்து வரும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாரோ? அதேபோல இவர்களைச் சேர்க்காவிட்டால் வரும் தேர்தலில் தோற்றாலும் அவர் பதவிக்கு ஆபத்துதான் என பாஜக எடுத்துச் சொல்லி வருகிறது. அதனையும் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்
இது மட்டுமல்லாமல் பாஜக அதிமுக கூட்டணியில் நடக்கும் சமரச முயற்சிகள், டிடிவி தினகரன் விலகியதன் பின்னணி, சசிகலாவின் புதிய வியூகங்கள், நடிகர் விஜய்யின் அரசியலில் சாத்தியங்கள் எனப் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை ஆழமாக அலசி இருக்கிறார் ப்ரியா. அவரது முழு பேட்டியை காண...












Click it and Unblock the Notifications