அதிமுகவுக்கு தாவிய பாஜக மாநில நிர்வாகி.. கூட்டணி முறிந்த கையோடு “தூண்டில்”.. அண்ணாமலைக்கு ஷாக்!
சென்னை: பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள அதிமுக, அக்கட்சி நிர்வாகிகளையும் இழுத்து வருகிறது. பாஜகவின் மருத்துவர் அணி மாநில பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. திமுகவை விமர்சிப்பதற்கு இணையாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவையும் அண்ணாமலை விமர்சித்து அதிமுகவினரை சீண்டி வந்தார். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் நேரடியாக தாக்கிப் பேசியதால் இனியும் பாஜகவுடன் கூட்டணியை தொடர முடியாது என அதிமுக முடிவெடுத்தது.

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக உடனான கூட்டணி முறிவை உறுதிப்படுத்தியதுடன் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அதிமுக தலைவர்களும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையையும், பாஜகவையும் விமர்சித்து பேசி வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணியை முறித்த வேகத்தில், பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஐடி விங் 4 மண்டலங்களாக செயல்பட்டு வந்த நிலையில், ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார். மருத்துவர் அணி உள்பட பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டினார். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாஜகவின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பாஜகவின் மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் விஜயபாண்டியன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் அதிமுக மருத்துவர் அணியின் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்காக நன்றி தெரிவிப்பற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, பாஜகவில் மருத்துவர் அணி மாநில தலைவராக இருந்த விஜயபாண்டியனையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது விஜயபாண்டியன், அதிமுகவில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே பாஜக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக இருந்த சி.டி.ஆர். நிர்மல் குமார், செயலாளராக இருந்த திலீப் கண்ணன், மற்றும் முக்கிய நிர்வாகிகளான அம்மு, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருந்த கோமதி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், அடுத்த கட்டமாக தற்போது பாஜக உடனான கூட்டணியை முறித்துள்ள அதிமுக, பாஜகவில் இருக்கும் நிர்வாகிகளை இழுப்பதில் வேகம் காட்டி வருகிறதாம். திமுக, பாஜக என மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை அதிமுகவுக்கு கொண்டு வருவதற்கான வேலையில் டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் கமுக்கமாக காய் நகர்த்தி வருகின்றனராம்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications