ரஜினியால பெரியாளானீங்க! அண்ணாத்தய விட்டுட்டீங்க! சூர்யாவுக்கு பொங்கறீங்க! வம்பிழுக்கும் பாஜக காயத்ரி
சென்னை: ரஜினியால் இரு படங்களை இயக்கி பெரிய இயக்குநராகிய நீங்கள் அவரது படத்தை Plip Plip YouTube channel தகாத வார்த்தைகளால் விமர்சித்தபோது எங்கே போனீர்கள் என இயக்குநர் பா ரஞ்சித்தை பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா வாழ்ந்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பாராட்டுகளும் கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளன.
பாமக சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாக கூறிய வன்னியர் சங்கம், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிரென்ட்
இதனால் #weStandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. சூர்யாவின் உருவம் பொதித்த படத்தில் இந்த ஹேஷ்டேக் எழுதப்பட்டு அதை சூர்யாவின் ஆதரவாளர்கள் டிபியாக வைத்து வருகிறார்கள். இந்த படத்தை இயக்குநர் பா ரஞ்சித் ட்விட்டரில் டிரென்டாக்கினார். அவர் #jaibhim ##weStandwithSurya என தெரிவித்துள்ளார். இதை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

யூடியூப் சேனல்
இதுகுறித்து பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ரஜினிகாந்த் சார் உங்களுக்கு இரண்டு பெரிய படங்களில் வாய்ப்பு கொடுத்து உங்களை பெரிய இயக்குனராக்கிவிட்டார்.. ரஜினி சாரை திமுக ஆதரிக்கும் Plip Plip YouTube channel தகாத வார்த்தைகளால் திட்டினார் விமர்சித்தார். நீங்களும் சினிமா துறையும் ஏன் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை?

சினிமாவில் ஜாதி
ஆனால் ஒரு சமூகத்தை குறிவைத்த சூர்யாவை மட்டும் ஆதரிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் என்ன? யார் யாரைப் பிரிக்கிறார்கள்? சினிமாவை முழுமையாக திமுக கைப்பற்றியது. திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது. சாதி, மதம் இல்லாத ஒரே தொழில் சினிமா மட்டுமே. இப்போது அது தவறான கைகளுக்கு சென்றுவிட்டது என விமர்சித்துள்ளார்.

ரஜினி தயாரிப்பா
இதற்கு பலர் காயத்ரியை திட்டியும் அவருக்கு ஆதரவாகவும் ட்வீட்டுகளை போட்டுள்ளனர். அதில் ஒரு ட்வீட்டில் ரஜினி மட்டும் சும்மா ஓசிலயா நடிச்சாரு, கோடி கோடியா வாங்குனாரு நடிக்கிறாரு, ரஜினி படம் எடுத்து ரஞ்சித் பெரிய ஆள் ஆகலை, ரஞ்சி நல்ல டைரக்டர்னு ரஜினி நடிக்க ஓகே சொன்னாரு. சான்ஸ் கொடுக்க அந்த இரு படங்களையும் என்ன ரஜினியா தயாரிச்சாரு என கேள்வி எழுப்பியுள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video

சூப்பர் ஸ்டார் மாஸ் நடிகர்
சூப்பர் ஸ்டார் ஒரு மாபெரும் நடிகர், இரும்பு மனிதர். அவருக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. இந்த உலகில் அவரை யாராலும் அவதூறாக பேச முடியாது. ஹை வோல்டேஜ் கரண்ட் ரஜினி, அவர்கிட்ட யாரும் நெருங்க முடியாது. எனவே உங்கள் அரசியல் விளையாட்டுக்கு பா ரஞ்சித்தை ஏன் இழுக்கிறீங்க. ரஜினிகாந்தே சூர்யாவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார் என்கிறார் இந்த நெட்டிசன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications