திமுகவுடன் அதிமுக கைகுலுக்கப் போகிறதா?.. உங்களை தூண்டியது யார்? பொன்னையனுக்கு காயத்ரி கேள்வி
சென்னை: பாஜகவின் மாயத்தோற்றத்தை உடைப்போம் என அதிமுக நிர்வாகி பொன்னையன் கூறியிருந்தது குறித்து பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
அண்மைக்காலமாக பாஜக- அதிமுக இடையே வார்த்தை போரால் சலசலப்புகள் ஏற்பட்டு வந்தன. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்திருந்தார்.
அது போல் அதிமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். ஒவ்வொரு முறையும் இது போன்ற விமர்சனங்களும் அதற்கு இரு தரப்பும் சப்பை கட்டு கட்டி பதிலளிப்பதுமாக இருந்தது.

அதிமுக நிர்வாகி
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக நிர்வாகி பொன்னையன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில் பாஜக நட்பு கட்சிதான் என்றாலும் அதிமுகவின் கொள்கையோடு அக்கட்சி ஒத்து போவதில்லை. தமிழகத்தின் உரிமைக்காக பாஜக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை.

கொள்கை
பாஜக தனது கொள்கையை மாற்றி கொள்ளாத வரை தமிழகத்தில் அக்கட்சியால் வளரவே முடியாது. மாநிலம் சார்ந்த பிரச்சினைகளான காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு விவகாரங்களில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. எச்சரிக்கையுடன் அதனை சமூகவலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு பணியை அதிமுக மேற்கொள்ள வேண்டும் என பேசியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க போகின்றன. சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை தட்டிக் கொடுத்து கை குலுக்கி பேசியிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி இப்படி ஒரு கருத்தை கூறுகிறாரே என்ற விவாதங்கள் எழுந்தன.

பாஜக தலைவர் அண்ணாமலை
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளிக்கையில் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. மடைத் திறந்த வெள்ளம் போல் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் இருப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் "பாஜகவின் மாயத்தோற்றத்தை உடைப்போம்.

பாஜகவை முறியடிப்போம்
பாஜகவை முறியடிப்போம்" - அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் அதிமுக மற்றும் பாஜக இடையே எப்பொழுதும் நட்பு உறவை பேணி வருகிறோம். இப்போது உங்களை தூண்டியது யார்? அதாவது திமுகவுடன் அதிமுக கைகுலுக்கப் போகிறதா? எம்.ஜி.ஆருக்கும், ஜே.ஜே. அம்மாவுக்கும் எதிராக செல்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!












Click it and Unblock the Notifications