பாஜக 'மவுன' விரதம்- முடித்து வைக்கும் பிஎல் சந்தோஷ்! அதிமுக உறவு முறிவு-அண்ணாமலையுடன் அதிரடி ஆலோசனை!
சென்னை: அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் இன்று சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்கப்படும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

டெல்லி போட்ட வாய்ப்பூட்டு: அதிமுகவின் இந்த திட்டவட்டமாக நிலைப்பாட்டை பாஜக தலைவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நிலைப்பாடுகளால்தான் கூட்டணியை அதிமுக முறித்தது. ஆனாலும் அண்ணாமலை உட்பட தமிழ்நாடு பாஜக தலைவர்கள் யாரும் அதிமுக கூட்டணியை முறித்தது தொடர்பாக எதுவுமே பேசக் கூடாது என கட்டளை பிறப்பித்தது டெல்லி மேலிடம். இதனை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் யூ டியூப் சேனல் பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார்.
அண்ணாமலைக்கு பாராட்டு: அந்த சூழலில் டெல்லி சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேலிடத்தில் தமிழ்நாடு குறித்தி சில பல தகவல்களை கொடுத்ததாகவும் அதனால் அண்ணாமலையின் நடவடிக்கைகளை மேலிடம் பாராட்டியதாகவும் தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்டோர் ஊடகப் பேட்டிகளில் தெரிவிக்கின்றனர்.

பிஎல் சந்தோஷ் வருகிறார்: தற்போது பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் இன்று சென்னை வருகை தர உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக கூட்டணி முறிவு, புதிய கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறாராம் பிஎல் சந்தோஷ்.
மவுன விரதம் முடித்து வைப்பு?: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் பிஎல் சந்தோஷ் சந்தித்து பேசக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அப்படி செய்தியாளர்களை சந்தித்தால் அதிமுக கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவித்தாக வேண்டும். இதுவரை தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கடைபிடித்து வரும் மவுன விரதத்தை பிஎல் சந்தோஷ் முடித்து வைத்தால் இனி பகிரங்கமாக அதிமுக தலைவர்களை பாஜக தலைவர்கள் விமர்சிக்கவும் தொடங்குவர் எனவும் கூறப்படுகிறது. இதனால் பிஎல் சந்தோஷின் சென்னை பயணத்தை பாஜக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications