ஜஸ்ட் மிஸ்.. வழிக்கு வராத பாஜக.. “பொத்தி வச்ச கையை திறக்கலயே”.. கிரேட் எஸ்கேப் ஆன அண்ணாமலை!
பாஜக சாதுர்யமாக போட்டியில் இருந்து விலகி கட்சியை காப்பாற்றிக் கொண்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 'கிரேட் எஸ்கேப்'' ஆகியுள்ளது பாஜக. ஓபிஎஸ் பாஜகவை களத்தில் இறக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இது எங்களுக்கான களம் அல்ல எனக் கூறி எஸ்கேப் ஆனார் அண்னாமலை. தற்போது ஈரோடு கிழக்கில் வந்துள்ள தேர்தல் முடிவு மூலம், பாஜக தங்கள் முடிவால் தப்பித்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 6 மணியளவில் முடிவடைந்தது.
திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுளார்.அதிமுக வேட்பாளரை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் இளங்கோவன்.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமாகாவை விலக வைத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிட ரெடியானதுமே, தங்கள் அணியும் போட்டியிடுவதாக அறிவித்தார் ஓபிஎஸ். பின்னர், ஈபிஎஸ் அணி வேட்பாளரை அறிவித்த சில மணி நேரங்களில் தனது அணியின் வேட்பாளரையும் அறிவித்தார் ஓபிஎஸ். அப்போதும் கூட, பாஜக போட்டியிட விரும்பினால், தங்கள் வேட்பாளரை திரும்பப் பெறுவோம் எனத் தெரிவித்தார். பாஜகவை போட்டியிட வைத்துவிட்டு, தான் விலகிக்கொள்ள வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் விருப்பமாக இருந்தது.

குஜராத் பயணம்
பாஜக இந்த தேர்தலில் களமிறங்க வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இது அமையும் என்று ஓபிஎஸ் தமிழ்நாடு பாஜக தலைவர்களிடம் மட்டுமல்லாது, குஜராத் சென்று அங்கு பாஜக முன்னணி தலைவர்களிடமும் பேசினார். தான் நின்று குறைவான வாக்குகள் பெற்றால் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துவிடும், அதேசமயம் பாஜக களத்தில் இறங்கினால் எடப்பாடியும் பின்வாங்க வேண்டிய சூழலும் ஏற்படும் என நினைத்தார் ஓபிஎஸ். ஆனால், பாஜக இதில் தலைகொடுக்க விரும்பாமல் தவிர்த்தது.

தவிர்த்த அண்ணாமலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடைசிவரை தாங்கள் போட்டியிடுவதா அல்லது அதிமுகவில் எந்த அணியை ஆதரிப்பது என்பதில் எந்தவொரு முடிவையும் அறிவிக்காமல் தலையைச் சொறியவைத்து பாஜக. பின்னர், "இது எங்களுக்கான தேர்தல் இல்லை. அதே நேரத்தில் வலுவான ஒரு வேட்பாளர், அசுர பலம் கொண்ட திமுகவுக்கு எதிராக நிற்க வேண்டுமென்றால், வலிமையான வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்து வேட்பாளரை நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம்
பின்னர், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நிற்பது உறுதியானதும், அவருக்கே பாஜகவின் ஆதரவு எனத் தெரிவித்தார். அதேசமயம், ஈரோடு கிழக்கில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த சூழலில் இலங்கைக்குச் சென்றுவிட்டார் அண்ணாமலை. பாஜகவினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவ்வளவாக தேர்தல் பணியாற்றவில்லை. ஆனால், முதல் ஆளாக, தேர்தல் பணிக்குழுவை அமைத்ததே தமிழ்நாடு பாஜக தான் என்பது கவனிக்க வேண்டியது.

ஒரே சின்னத்தில் நிற்க வேண்டும்
இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஈவிகேஸ் இளங்கோவன் வெற்றி முகம் கண்ட நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, இடைத்தேர்தல் ஆரம்பித்தபோது இந்த வார்த்தையை சொன்னேன், 2024 தேர்தல் தான் எங்களுக்கான தேர்தல். இந்த இடைத்தேர்தல் என்பது பாஜகவுக்கான இடைத்தேர்தல் இல்லை. அதனால், நாங்கள் போட்டியிடவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருந்தோம். ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்கேப்
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதுவும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி வலிமை வாய்ந்த நிலையில் நின்றபோதே இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் திமுக கூட்டணி வென்றிருக்கிறது. இத்தனைக்கும் ஈபிஎஸ், ஆளுங்கட்சியான திமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அனைத்து பலத்தையும் பிரயோகித்தார். பாஜக களத்தில் நின்றிருந்தால் இன்னும் நிலைமை மோசமாகியிருக்கும். அப்படியான சூழலை நாசூக்காக தவிர்த்து பாஜக எஸ்கேப் ஆகிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கையை விரித்துக் காட்டியது போல
பாஜக தமிழ்நாட்டில் வெகுவாக வளர்ந்து வருவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கைக்குள் உண்மையிலேயே என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளுக்குள் ஒன்றுமே இல்லாமல் கூட கையை பொத்தி வைத்திருந்தால், பலமாக இருப்பது போல சொல்லிக் கொள்ளலாம். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நின்றிருந்தால் அக்கட்சி கையை விரித்துக் காட்டியது போல அமைந்திருக்கும். அதைத் தவிர்த்தது புத்திசாலித்தனமான முடிவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்










Click it and Unblock the Notifications