காலங்காத்தாலே எச்.ராஜாவுக்கு வந்த டவுட்.. "திராவிட ஸ்டாக்?".. திமுக என்ன செய்ய போகிறது?

பெட்ரோல் டீசல் வாட் வரி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா திமுக அரசுக்கு முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளார்.. அதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது... பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது.

அதேபோல டீசல் விலையும் பல மாநிலங்களில் சதமடிக்க ஆரம்பித்துவிட்டது.. இதன்காரணமாக சரக்கு போக்குவரத்திலும் சிக்கல் ஏற்பட்டது.. செலவு அதிகமாவதால் அத்திவாசிய பொருட்களின் விலையும் உரயக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

 தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

எனவே, மத்திய அரசின் வரியை குறைத்தால், அதன்மூலம் பெட்ரோல் டீசல் விலை ஓரளவு குறையும் என்ற கோரிக்கை வலுவாக பல்வேறு தரப்பில் இருந்து எழுப்பப்பட்டது.. அதன்படியே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 குறைக்கப்பட்டது..

 பாஜக அரசு

பாஜக அரசு

அதேபோல மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது... இதையடுத்துதான், பாஜக ஆட்சியில் உள்ள 6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைப்பதான அறிவிப்பும் வெளியானது.. அதாவது, அசாம், திரிபுரா, கர்நாடகா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கப்போவதாக அறிவித்தன.

 வாட் வரி

வாட் வரி

அசாம், திரிபுரா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது, உத்தரகண்ட் மாநிலத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி லிட்டருக்கு ₹2 குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... இமாச்சலப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

 தேர்தல்

தேர்தல்

பெங்களூருவில் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பால், பெட்ரோல் விலை 12 ரூபாயும், டீசல் விலை 17 ரூபாயும் குறைந்துள்ளது... விரைவில் மக்களவை தேர்தல் வர உள்ளநிலையில், பல்வேறு மாநிலங்கள், விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், பாஜக மாநில அரசுகளின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்


இப்போது வரையில் மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கப்பட்டுள்ளன.. ஆனால், பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாட் வரியை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே உள்ளது..

 எச்.ராஜா

எச்.ராஜா

நம் தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கலின்போது பெட்ரோல் மீதான வரியை ரூ. 3 குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது... அதற்கு பிறகு எந்தவித அறிவிப்பும் அது தொடர்பாக வரவில்லை.. இதைதான் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.

 பெட்ரோல்

பெட்ரோல்

அதில், "மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோலுக்கு ₹5 மற்றும் ₹10 குறைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்துள்ளன. ஆனால் திமுக, காங்கிரஸ், சிவசேனா, திரிணமூல், கம்யூனிஸ்ட் அரசுகள் வரி குறைக்கவில்லை. திராவிட ஸ்டாக்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இது பாஜகவின் கேள்வியாக மட்டுமில்லை.. இதே கேள்வியைதான் மநீம தலைவர் கமல்ஹாசனும் எழுப்பியிருந்தார்.. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று, வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வு, வெள்ளச் சேதங்கள் என மக்கள் தவித்து வரும் நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.. திமுக அரசு முன்வருமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+