டெல்லியில் முகாமா.. அண்ணாமலைக்கு நானா முட்டுக்கட்டை? பாய்ந்து வந்த எச். ராஜா.. பரபர பஞ்சாயத்து!
சென்னை: தான் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக வெளியான செய்திகளுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை தலைவராக பதவி ஏற்றபின் புதிதாக நிர்வாகிகள் பெரிய அளவில் மாற்றப்படவில்லை. அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகப்போகின்றன.
ஆனால் இதுவரை மாநில பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேபோல் மாவட்ட அளவில் செயலாளர்களை மாற்றவும் இல்லை.

பாஜக சர்ச்சை
புதிதாக ஒரு தலைவர் பதவி ஏற்ற பின் பொதுவாக இது போன்ற பதவிகள் மாற்றப்படுவது வழக்கம். ஆனால் பெரிதாக இதில் பதவி மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் செய்தி தாள் ஒன்றில் இதை பற்றி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில் மாநில பொதுச்செயலாளர்களை நியமனம் செய்வதில் அண்ணாமலைக்கு மூத்த பாஜக நிர்வாகிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அண்ணாமலை எச் ராஜா
முக்கியமாக அண்ணாமலைக்கு பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா போன்ற மூத்த நிர்வாகிகள் முட்டுக்கட்டை போடுவதாகவும். இவர்களுக்கு இடையில் பஞ்சாயத்து நிலவுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் சமீபத்தில் மாநில பொதுச்செயலாளர்களுக்கான உத்தேச லிஸ்ட் தயாரிக்கப்பட்டதாகவும், அந்த லிஸ்ட் மீது அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

எச் ராஜா
இதையடுத்து அண்ணாமலை இது பற்றி பாஜக மேலிடத்திற்கு புகார் அளித்துள்ளதாகவும். புதிய மாநில பொதுச்செயலாளர்களை நியமனம் செய்வது தொடர்பாக அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் எச். ராஜாவும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் முகாமிட்டு உள்ளார். மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார் என்று அண்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது .

விளக்கம் இதுதான்
செய்தி தாள் ஒன்றில் வெளியான இந்த செய்தியை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மறுத்துள்ளார். தான் டெல்லியில் முகாமிடவில்லை என்று விளக்கி உள்ளார். நான் யாருக்கும் முட்டுக்கட்டையும் அல்ல,. கடந்த 3 நாட்களாக டில்லியில் முகாமிடவும் இல்லை. கடந்த 3 நாட்களாக மதுரையில் ஆண்டு வங்கி ஆடிட்டிங்கிள் உள்ளேன். கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன: கடமையை செய் பலனை எதிர் பாராதே. கண்ணன் வாக்கு... என்று எச். ராஜா தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications