"என்னடா பித்தலாட்டம் இது".. மீம்ஸ் போட்டு இடித்துரைத்த எச். ராஜா.. குபுகுபுவென குவிந்த கமெண்ட்டுகள்!
பாஜகவின் எச் ராஜா திமுகவை மீம் போட்டு விமர்சித்துள்ளார்
சென்னை: "என்னடா பித்தலாட்டம் இது" என்று கேட்கும் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு, ஸ்டாலினின் திமுக அரசை இடித்துரைத்து ட்வீட் போட்டுள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... 3வது அலை வரக்கூடிய சூழல் உள்ளதாக எச்சரிக்கை ஏற்கனவே உள்ளது..
எனவே, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், எதிர்வரும் காலம் பண்டிகை காலம் என்பதால் மக்கள் பண்டிகைகளின் மூலம் கூட்டம் கூடுவதை கூட தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

கூட்டம்
இப்படிப்பட்ட சூழலில், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கவோ, பின்னர் அதை கூட்டமாக சென்று கடலில் கரைப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என அரசு தடை விதித்துள்ளது.. ஆனால், வீட்டிலேயே சிலை வைத்து தனிமனிதராக வழிபாடு செய்து பிறகு, தனி நபராக அந்த சிலையை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளது.

எதிர்ப்பு
ஆனால், இதை இந்து அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.. இந்து முன்னணியினர் இதற்காக ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தினர்.. எத்தனை தடைகள் போட்டாலும், திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்துவிட்டார்.. அதேபோல, விநாயகர் சதுர்த்தி நடத்தவிடாவிட்டால், ஆட்சியை கவிழ்ப்போம் என்ற ரீதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் எச்சரித்திருந்தார்.

கட்டுப்பாடு
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடைக்குப் பதிலாக கட்டுப்பாடு விதிக்கலாம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தமும் தெரிவித்திருந்தார். காயத்ரி ரகுராமும், "விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம்.... ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு. தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் திமுக திணிக்கிறது. டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும்போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்?" என்று காயத்ரி கேள்வி எழுப்பியிருந்தார்.

கேள்வி
இப்படி ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் திரண்டு தமிழக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.. அந்த வகையில், மற்றொரு மூத்த தலைவரான எச்.ராஜாவும் ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.. ஆனால், அதை மறைமுகமாக ஒரு மீம்ஸ் பதிவிட்டு ட்வீட் போட்டுள்ளார்.. "தொற்று குறைந்ததால் பள்ளிகள் திறப்பு, தொற்று இருப்பதால் விநாயகர் சதுர்த்திக்கு தடை.. என்னடா பித்தலாட்டம் இது" என்ற மீம் பதிவை போட்டு, "சிந்திக்க வேண்டிய விஷயம்" என்று எச் ராஜா கூறியுள்ளார்.

பேட்டி
அதாவது விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டும் என்பதையே இப்படி நாசூக்காக மீம்ஸ் போட்டு கோரிக்கை வைத்துள்ளார் எச் ராஜா.. நேற்று முன்தினம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஒரு பேட்டி தந்திருந்தார்... அதில் விநாயகர் ஊர்வலத்துக்கு தடை விதித்தால், திமுக ஆட்சியையே இல்லாமல் செய்துவிடுவோம் என்று அண்ணாமலை கூறியது பற்றி கருத்து கேட்கப்பட்டது..

அனுமதி
அதற்கு வீரமணி, "பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் பாஜக பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும்... தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத திமுக அரசை கலைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களே, முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று சொன்னது ஒன்றிய அரசுதான்..

ஆளுங்கட்சி
அதனால் ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பிறகு தமிழ்நாடு பக்கம் வரட்டும்... அப்படியே தமிழ்நாட்டில் மறுபடியும் தேர்தல் நடைபெற்றால், எதிர்கட்சியே ஆளுங்கட்சியாக செயல்படும் நிலையில், எதிர்கட்சி இல்லாமல் மீண்டும் முக ஸ்டாலினே வெற்றி பெறுவார்" என்று திடமாக கூறியிருந்ததையும் இங்கு நினைவுபடுத்த வேண்டி உள்ளது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications