என்னது கோவிலுக்கு போக கூடாதா? இந்து விரோத ’தீயசக்திகள்’ மிஷ்கினை குண்டாஸில் போடுங்க..ஆவேசமான H.ராஜா!
சென்னை: தி ப்ரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோயிலுக்கு போக வேண்டாம் தியேட்டரில் போய் படம் பாருங்கள் என பேசிய இயக்குநர் மிஷ்கினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
நடன இயக்குனர் ராதிகா இயக்கிய தி ப்ரூப் படத்தில் தன்ஷிகா முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசியது சமூக வலைதளங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இயக்குனர் மிஷ்கின்: நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின்,கோயிலுக்குப் போகாதீங்க தியேட்டருக்கு போங்க.. ஒரு குடும்பத்தில் 5 பேர் போய் படம் பார்க்கலைனா அது குடும்பமே இல்லை ..வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும்" என்றார்.
சர்ச்சைப் பேச்சு: மேலும்,"என்னைக்காவது சிவனை பார்த்து இருக்கீங்களா? என்னை பொறுத்தவரையில் சிவாஜி கணேசன் தான் சிவன். அவர் நடிப்பில் தான் சிவனை பார்த்திருக்கிறேன். கோயில் உங்களுக்கு எதுவும் தராது. தியேட்டரில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டும், உணர்ச்சி பூர்வமான படங்களை அழுது கொண்டும் கொண்டாட்டத்துடன் பார்க்கலாம்" என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பெற்றது.
டிஜிபியிடம் புகார்: மிஷ்கினின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது டிஜிபியிடமும் புகார் அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு நிர்வாகியான நிரஞ்சன் இயக்குனர் மிஷ்கின் மீது டிஜிபி அலுவலகத்திற்கு இமெயிலில் புகார் அளித்தார். அதில்,"இயக்குனர் மிஷ்கின் கோவிலுக்கு போகாதீங்க.. சினிமாவுக்கு போங்க.. என மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
பாஜக எச்.ராஜா: மேலும் மாதத்திற்கு ஒரு குடும்பம் சினிமாவை பார்க்கவில்லை என்றால் அது குடும்பமே இல்லை.. பாவம் செய்தவர்கள் தான் கோவிலுக்கு செல்கிறார்கள்" என ஹிந்து மதவெறுப்பாக பேசி உள்ளார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்நிலையில் மிஷ்கினின் கருத்து குறித்து பாஜக மூத்த நிர்வாகியான எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," மிஷ்கின் போன்ற இந்து விரோத தீய சக்திகள் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications