பாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா!
இந்தி திணிப்புக்கு ஆதரவாக எச் ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: எச். ராஜா மறுபடியும் ஆரம்பித்து விட்டார். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடும் நிலையில் திமுகவினர், காங்கிரஸ் பிரமுகர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் எச் ராஜா.
இங்கெல்லாம் இந்தி கட்டாயம் என்பதையும் அவர் மறக்காமல் சுட்டிக் காட்டியுள்ளார். வெளியில் இந்தி திணிப்பு என்று கூறி விட்டு உள்ளுக்குள் சத்திமில்லாமல் ரகசியமாக இவர்கள் இந்தியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். இது இரட்டை நிலை இல்லையா என்றும் கேட்டுள்ளார் எச். ராஜா.
கொஞ்ச நாளாவே சற்று காட்டமான ட்வீட்டுகளைத்தான் போட்டு வருகிறார் எச்.ராஜா. இந்த நிலையில் தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார் எச். ராஜா. மொத்தம் 45 பள்ளிகள் அடங்கிய பட்டியல் அது. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பிரமுகர்களுக்குச் சொந்தமான பள்ளி இது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

சபரீசன்
மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனைத்தான் குறி வைத்துள்ளார் எச். ராஜா. சபரீசனின் மனைவியும், ஸ்டாலின் மகளுமான செந்தாமரை சபரீசன் நடத்தி வரும் பள்ளிகளின் பட்டியலைத்தான் முதலில் அவர் போட்டுள்ளார்.

பட்டியல்
மாவட்ட வாரியாக பட்டியல் போட்டுள்ள எச். ராஜா அந்தப் பள்ளிகளின் பெயர், யார் நடத்துகிறார்கள் என்பது குறித்த விவரத்தையும் தெரிவித்துள்ளார். இவை எல்லாம் சிபிஎஸ்இ பள்ளிகளாம். இங்கெல்லாம் இந்தி கட்டாயமாம்.

சாடி உள்ளார்
அத்தோடு நில்லாமல், "அரசுப் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்க ஆரம்பித்தால் இவர்களது பள்ளிகளின் பிசினஸ் பாதிக்கும். இதனால்தான் இந்தியைக் கொண்டு வருவதை இவர்கள் எதிர்க்கிறார்கள்" என்று சாடியுள்ளார் எச். ராஜா.

மருமகன்
செந்தாமரை சபரீசன் தவிர்த்து, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பேரன் வெற்றி அழகன், ஆற்காடு வீராசாமி தம்பி தேவராஜ், திமுக எம்பி ஜெகத்ரசட்சகன் நடத்தும் பள்ளி, மு.க.முத்துவின் மருமகன் சி.கே.ரங்கநாதன் நடத்தும் பள்ளி, திமுக எம்எல்ஏ வெங்கட்டானின் மகன் வி. கணேசன், திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், திமுக எம்எல்ஏ எ. வ வேலு மனைவி ஜீவா வேலு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில செயலாளர் முகம்மது நிஸாம் நடத்தும் பள்ளி என பட்டியல் நீள்கிறது.
|
மூட வேண்டும்
இதுதவிர எச். ராஜா போட்டுள்ள இன்னொரு டிவீட்டில், " முதலில் சன்ஷைன் மான்டிசோரி, சன்ஷைன் சீனியர் செகண்டரி பள்ளி, கிங்ஸ்டன் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளார்.
திமுக தரப்பு எப்படி ரியாக்ஷன் காட்டுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications