ஆமா.. காரைக்குடியில் தக்காளி ஒரு கிலோ ரூ.80 தானாமே.. எச்.ராஜாவே சொல்லிட்டாரு..!
காரைக்குடியில் தக்காளி விலை ரூ.80 என்று எச்.ராஜா பதிவிட்டுள்ளார்
சென்னை: காரைக்குடியில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.80 என்று, தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருவ மழை தொடங்கியது. இதன் எதிரொலியால், தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து குறைந்தது.
குறிப்பாக, ஆந்திராவில் இருந்து வரும் தக்காளிகளும் தமிழ்நாட்டில் விளைய வைக்கப்பட்ட தக்காளிகளும் மழையால் சேதமாகிவிட்டன.. தக்காளி வரத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சேதம்
இதன் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.180 வரை விற்கப்பட்டது.. பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.70, ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன... சமையலுக்கு தினமும் தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... எனவே, தக்காளியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர்.

சந்தை
இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூ.30 குறைந்தது... நேற்று முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.30 குறைந்து, கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையாகிறது.. இதேபோல், 2-ம் ரக தக்காளி ரூ.100ல் இருந்து ரூ.30 குறைந்து, ரூ.70க்கு விற்பனையாகிறது.. தக்காளியின் வரத்தும் அதிகரித்துள்ளது.. இதனால் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளளனர்.

தக்காளி
தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கும் மகிழ்ச்சிதான் போலும்.. தக்காளி போட்டோவை போட்டு, ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. எச்.ராஜா.. அதில், "இன்று காரைக்குடியில் தக்காளி 1 கிலோ ₹80 தான்" என்று தெரிவித்துள்ளார்.. இதற்குதான் ட்விட்டர்வாசிகள் பலரும் திரண்டு வந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எச்.ராஜா
"லைட்டிங்ல தக்காளி லைட்டா ஒக்காளி மஞ்சளா தெரியுது... பாத்து... அஞ்சு கோடி கேட்டு வருவாங்க. அடிச்சுக்கூட கேப்பாங்க. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்னு சொல்லி தக்காளியாலே அடிச்சு விரட்டு என் தெய்வமே" என்றும் காரைக்குடில எங்க கடை போட்டு இருக்கீங்கன்னு போடுங்க, அப்போதான் கூட்டம் வரும் என்றும் எச்.ராஜாவுக்கு ட்விட்டர்வாசிகள் பதிலளித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications