கோடியில் புரளும் பாஜக.. 6 கட்சிகளின் வருவாயில் 76.73% ஒரே கட்சிக்கு! காங்கிரஸ், கம்யூனிஸ்டு பாவம்
சென்னை: 2022 - 2023 நிதியாண்டில் 6 தேசிய கட்சிகள் பெற்ற வருவாயில் 76 சதவீதம் பாஜகவுக்கு மட்டுமே கிடைத்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த 2022 - 2023 நிதியாண்டில் 6 தேசிய கட்சிகள் ரூ.3077 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். இதில் ஒரு கட்சி மட்டும் பாதிக்கும் அதிகமான வருவாயை ஈட்டி இருக்கிறது. அதுதான் ஆளும் பாஜக. ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்த கணக்கு விபரத்தை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது.

இந்த கணக்கு விபரத்தின்படி 6 தேசியக் கட்சிகளின் மொத்த வருவாயான ரூ.3077 கோடியில் 76.73 சதவீதம் பாஜக பங்கு வகிக்கிறது. பாஜகவுக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரூ.452.375 கோடி வருவாயை ஈட்டி இருக்கிறது. இது 6 கட்சிகளின் மொத்த வருவாயில் 14.70% ஆகும். பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் தங்களின் வருமான விவரத்தை வெளியிட்டு உள்ளன.
2021 - 22 நிதியாண்டு மற்றும் 2022 - 23 நிதியாண்டுக்கு இடையே பாஜகவின் வருவாய் 23.15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2021 - 2022 நிதியாண்டில் கிடைத்த வருவாய் ரூ.1917.12 கோடியில் இருந்து 2022 - 2023 நிதியாண்டில் ரூ.2360.844 கோடி, அதாவது ரூ.443.724 அதிகரித்து இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் தேசிய மக்கள் கட்சியின் வருவாய் 2021 22 நிதியாண்டு ஒப்பிடுகையில் 2022 - 2023 நிதி ஆண்டில் 1052.12 சதவீதம் அதிகரித்து உள்ளதாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.7.09 கோடியாக இருந்த வருவாய் அடுத்த நிதியாண்டில் ரூ.47.20 கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை அதன் வருவாய் 91.23 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2021 - 22 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.44.539 கோடியாக இருந்த நிலையில் 2023 நிதியாண்டில் பெற்ற வருவாய் ரூ.85.17 கோடியாக அதிகரித்துள்ளது.
2021 - 2022 நிதியாண்டு மற்றும் 2022 - 2023 நிதியாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வருவாய் 16 சதவீதம் குறைந்து இருக்கிறது. மொத்தமாக இது ரூ.88.90 கோடியை தொடுகிறது. அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 12.68 சதவீதம் அதாவது ரூ.20.575 கோடி சரிந்து இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்தவரை முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வருவாய் 33.14 சதவீதம், அதாவது ரூ.14.58 கோடி குறைந்து இருக்கிறதாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் குறிப்பாக பாஜக ரூ.2360.84 கோடி வருவாயை 2022 - 2023 நிதியாண்டில் பெற்றிருக்கிறது. ஆனால் அதில் 507.68 சதவீதம் மட்டுமே செலவழித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் மொத்த வருவாய் ரூ.1,361.684 கோடியாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால், அதன் மொத்த வருவாய் ரூ.452.375 கோடியாக உள்ள நிலையில் ரூ.467.135 கோடியை செலவழித்து உள்ளது. இதன்மூலம் அதன் வருவாயை விட செலவு 3.26 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியாண்டு வருவாய் ரூ.141. 661 கோடியாக உள்ள நிலையில் அது ரூ.106.067 கோடி, அதாவது வருமானத்தில் 74.87% செலவழித்து இருக்கிறது. அதே போன்று ஆம் ஆத்மி கட்சி அந்த நிதியாண்டில் 85 கோடி வருவாய் ஈட்டி இருக்கும் நிலையில் செலவு ரூ.102.051 கோடியை செலவழித்து தன்னுடைய மொத்த வருவாயை விட 19.82 சதவீதம் அதிகமாக செலவழித்து இருக்கிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications