நாளை சென்னை வரும் டெல்லி மேலிட புள்ளி.. தேர்தலையொட்டி முக்கிய கமிட்டி அமைக்க பாஜக திட்டம்!
சென்னை: சட்டசபை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க NDA-ல் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைப்பதற்கு பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாளை சென்னையில் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி இறுதி செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, அமமுக, தமாகா, அன்புமணி தலைமையிலான பாமக, ஐஜேகே, தமமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

அண்ணாமலை முடிவு
இந்நிலையில், 5 சட்டசபை தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு, தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்திருந்தார். ஆனால் அண்ணாமலை, கட்சிக்குள் இருக்கும் அதிருப்தி காரணமாகவே இந்த முடிவை எடுத்தார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அண்ணாமலை, தமது பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தமிழக பாஜகவில் சலசலப்புகள் நீடித்து வரும் நிலையில் அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாளை ((பிப்ரவரி 9) சென்னை வரவுள்ளார். பாஜக நிர்வாகிகள் உடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது கட்சியினருக்கு சில அறிவுரைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிஎல் சந்தோஷ்
பி.எல்.சந்தோஷ் அண்ணாமலையின் அரசியல் குரு என்று சொல்லப்படுவது உண்டு. கர்நாடகாவில் அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்ட. அதைத்தொடர்ந்தே அண்ணாமலை பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. பிஎல் சந்தோஷ் மூலமாகவே அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் பதவியையும் பெற்றார் என்ற பேச்சு உள்ளது.
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தல் களத்தில் அண்ணாமலை எடுத்த முடிவால் கட்சிக்கு மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்வதற்கு பி.எல்.சந்தோஷ் சில வியூகங்களை வகுத்துச் செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முக்கிய ஆலோசனை
மேலும், சட்டசபை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க NDA-ல் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைப்பதற்கு பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாளை சென்னையில் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications