மாப்பிள்ளையுடன் இவருக்கு என்ன பேச்சு! கண் சிவந்த டெல்லி! பதற்றத்தில் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது பாஜக மேலிடத்துக்கு கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ரவீந்தரநாத் எம்.பி.யை அதிமுகவை சேர்ந்தவராக அங்கீகரிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் இந்தச் சந்திப்பை ஓபிஎஸ் மகன்களே ரசிக்கவில்லை என்பது தான் கூடுதல் தகவல்.
இதனிடையே சபரீசனுடனான சந்திப்பால் டெல்லி கண் சிவந்ததை அறிந்த ஓ.பன்னீர்செல்வம், பதற்றத்தில் தான் இருந்து வருகிறாராம்.

கடந்த 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் -மும்பை அணி இடையேயான கிரிக்கெட் போட்டியை தனது பேரன்களுடன் பார்க்க வந்த ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத விதமாக முதல்வர் மருமகன் சபரீசனை அங்கு சந்தித்து பேசினார்.
இந்த புகைப்படங்களை சபரீசன் தரப்பு வெளியிட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, திமுக, அதிமுகவினர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியது.
அதிமுக தொண்டர்கள் மத்தியில் பன்னீருக்கு எதிர்ப்பை அதிகரிக்கும் வகையில் பார்த்தீர்களா ஓ.பன்னீர்செல்வத்தின் திமுக விசுவாசத்தை என எடப்பாடி பழனிசாமி தரப்பு அதை ஊதி பெரிதாக்கியது.
இதனால் அப்செட் ஆன ஓ.பன்னீர்செல்வம் யதார்த்தமாக சந்தித்தை வைத்து சபரீசன் டீம் இப்படி அரசியல் செய்துவிட்டதே என நெருக்கமானவர்களிடம் குமுறியிருக்கிறார்.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மீதிருந்த கொஞ்சநஞ்ச பரிதாபமும், மரியாதையும் பாஜக மேலிடத்துக்கு இந்த சந்திப்புக்கு பிறகு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பதற்றத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், சபரீசனுடனான சந்திப்பு குறித்து எப்படி விளக்கம் அளிப்பது, யார் மூலம் எடுத்துக் கூறுவது எனத் தெரியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications