ரஜினி.. அதிமுக.. இன்னும் சிலர்.. தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அடிபோடும் பாஜக!
பாஜக கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பெரிய கூட்டணி வைக்க முயன்று வருவதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: பாஜக கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பெரிய கூட்டணி வைக்க முயன்று வருவதாக தகவல்கள் வருகிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் வரலாம் என்று இப்போதே தகவல்கள் வருகிறது.
இதற்கு முதற்கட்டமாக பாஜக இப்போதே, பீகார் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. மற்ற மாநிலங்களிலும் கூட்டணி வைப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

பாஜகவின் சவால்
பாஜகவிற்கு எப்போதும் தென் மாநிலங்கள்தான் சவாலான விஷயம். முக்கியமாக தமிழகத்தில் பாஜக எப்படி இடம் பிடிப்பது என்று பெரிய ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த முறை தமிழகத்தில் பாஜக பெரிய கூட்டணி அமைத்து லோக் சபா தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

விடாத திமுக
ஆனால் பாஜகவின் இந்த பெரிய கூட்டணி கனவிற்கு திமுகதான் பெரிய போட்டியாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல், தமிழகத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றாக உள்ளது. திமுகவுடன் மற்ற சிறு சிறு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து நட்பாக இருக்கிறது. முறையாக கூட்டணி என்று அறிவிக்கவில்லை என்றாலும் 70 சதவிகித கட்சிகள் திமுகவுடன்தான் கூட்டணி வைக்கும் முடிவில் உள்ளது.

பாஜக திட்டம்
இதில் மீதம் இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கத்தான் தற்போது பாஜக முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. அதாவது திமுக, திமுகவின் தோழமை கட்சிகள் இல்லாமல் மீதம் இருக்கும் கட்சிகளுடன் மெகா கூட்டணி வைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகிறது. இதில் அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், ரஜினி தொடங்க போகும் கட்சிகள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக வாய்ப்பு
முக்கியமாக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக அதிகம் முயலும் என்றும் கூறுகிறார்கள். அதிமுகவிற்கு இருக்கும் வாக்கு வங்கி தங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்றும் பாஜக நினைக்கிறது. அதேபோல் அதிமுக பாஜக நட்பு வெளிப்படையாக பலருக்கும் தெரிவதாலும், இணக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், இரண்டு கட்சிகளும் கண்டிப்பாக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ரஜினி சாய்ஸ்
அதேபோல் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியும் இதில் முக்கிய சாய்ஸில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. பிரதமர் மோடிக்கும் ரஜினிக்கும் பெரிய அளவில் பிரச்சனை எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பாஜக தலைவர்களுடன் ரஜினி பெரிய அளவில் நெருக்கம் காட்டி வருகிறார். ரஜினிக்கு இருக்கும் ரசிகர் பலம் தேர்தல் நேரத்தில் உதவும் என்று பாஜக நினைப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இதுவும் கூட
இது இல்லாமல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைக்க முயல்வதாகவும் தகவல்கள் வருகிறது. இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் பெரிய அளவில் நட்பில் இல்லை என்றாலும், மேலே கூறப்பட்ட கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வரவில்லை என்றால், கடைசியில் இவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை செய்ய பாஜக முயற்சிக்கும் என்று கூறுகிறார்கள்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications