“செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.. ஒரு அசைன்மெண்ட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளார்”- ரகுபதி அட்டாக்
சென்னை: "செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். "தமிழக வெற்றிக் கழகத்தில் சேர ஒரு குறிப்பிட்ட பணிக்காக அனுப்பப்பட்டவர். அதிமுகவுடன் இணைந்து பணியாற்றிய செங்கோட்டையன், பாஜகவால் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறார்." என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். அவருக்கு மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஆகிய பதவிகளை வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய். இந்நிலையில், அமைச்சர் ரகுபதியிடம், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, "என்னைப் பொறுத்தவரை செங்கோட்டையனை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கிறேன். அது உண்மையா என்பதை விரைவில் நிரூபிப்போம். அவர் அமித் ஷா அழைத்தால் ஓடுவார். இன்றும் அமித் ஷாவின் ரிமோட் கன்ட்ரோலில் ஓடிக்கொண்டிருப்பவர்.
தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட ஸ்லீப்பர் செல் தான் செங்கோட்டையன். அந்த அசைன்மென்ட்டில் தான், அவர் அனுப்பப்பட்டிருப்பார் என்பது எங்களின் கருத்து.
கட்சியை விட்டு ஒரு தலைவர் வரும்போது, மற்ற கட்சிகள் அழைப்பது இயல்புதான். செங்கோட்டையன் ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தபோது, அவரை அமைச்சர் சேகர்பாபு நட்பு ரீதியில் கட்சிக்கு அழைத்திருக்கலாம். அவர் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்பதால்தான் வரவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என செங்கோட்டையன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "நேற்று வரை செங்கோட்டையனுக்கு புத்தி எங்கே போனது? தற்போதும் தமிழகத்தில் புனிதமான ஆட்சி தான் நடைபெறுகிறது. எதிர்காலத்திலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் புனிதமான ஆட்சி தான் நடைபெறும்.
அதிமுக பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை வெறுத்துத்தான் விரட்டிவிட்டார். அவருக்கும் செங்கோட்டையனுக்கும் நல்ல புரிதல் கிடையாது. அதே நேரத்தில் பாஜகவோடு செங்கோட்டையனுக்கு நல்ல புரிதல் உள்ளது. எந்த பொறுப்பிலும் இல்லாமல் அமித் ஷாவை போய் டெல்லியில் சந்தித்து விட்டு அதற்குப் பிறகு அவர் ஒரு முடிவு எடுக்கிறார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை செங்கோட்டையன் சந்திக்கிறார். இப்படி பல்வேறு குழப்பங்களை எல்லாம் செய்துவிட்டு கடைசியாக பாஜகவுடைய ஸ்லீப்பர் செல்லாக தவெகவுடன் சென்று இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார் ரகுபதி.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா! -
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
கொடுமை! குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு.. புகார் அளித்த வழக்கறிஞர் மீது தவெகவினர் தாக்குதல்












Click it and Unblock the Notifications