புதுச்சேரியில் பாஜக சத்தமே இல்லாமல் செய்த வேலையை பாருங்க.. அதிமுகவுக்கு 5 தான்.. வேற மாறி.. வேற மாறி
சென்னை: புதுச்சேரி தொகுதி பங்கீட்டில், சத்தமே இல்லாமல், அதிமுகவை ஆதிக்கம் செலுத்தி அதிக தொகுதிகளை பெற்றுள்ளது பாஜக. இதுவரை ஒரு எம்எல்ஏ கூட ஜெயித்திராத பாஜக, அதிமுகவைவிட இரு மடங்கு அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது.
Recommended Video

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வந்தது. ஆனால் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்களும், கூட்டணியிலிருந்த திமுகவைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் அடுத்தடுத்து திடீரென பதவி விலகினர். இதில் காங். முக்கிய தலைவர், நமச்சிவாயம் முக்கியமானவர்.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நாராயணசாமி அரசு கலைந்த நிலையில், ஏப்ரல் 6ம் தேதி பொதுத் தேர்தலை சந்திக்கிறது புதுச்சேரி.

அதிமுகவுக்கு கம்மி சீட்
அங்கு மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணியமைத்து போட்டியிடுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக-அதிமுக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வந்தது. நேற்று தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த அதிமுக கட்சியினருக்கு கடும் அதிர்ச்சி. ஏனெனில், அதிமுக 5 இடங்களில்தான் போட்டியிடுகிறது.
பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

அதிமுகவுக்கு அதிர்ச்சி
இத்தனைக்கும் அதிமுகவில் தற்போது 4 சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கூடுதலாக மேற்கு மாநிலச்செயலருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் 16 சதவீதம். 4 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆனால் போட்டியிடுவது 5 தொகுதிகளில் மட்டும்தான்.

பாஜக ஏகப்பட்ட சீட்கள்
பாஜக நிலைமை படு மோசம். ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. போன தேர்தலில் 3 சதவீதம்தான் ஓட்டுக்களை வாங்கியது. ஆனால் போட்டியிடும் தொகுதிகள் 9. அதிமுக தலைமை இதை ஏற்றுக் கொண்டுள்ளது புதுச்சேரி அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காங்கிரசிலிருந்து விலகி வந்த நமச்சிவாயம் உள்ளிட்டோர், பாஜக சார்பில் போட்டியிடுவதால், அடித்து பேசி அதிக தொகுதிகளை முடித்துள்ளது என்று கூறுகிறார்கள்.

மொத்தம் 30 தொகுதிகள்
புதுவையில் ரங்கசாமி தலைமையிலான, என்.ஆா். காங்கிரஸ் தலைமையில், பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டசபைத் தோ்தலைச் சந்திக்கிறது. 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. மிச்சமுள்ள 14 தொகுதிகளைத்தான் பாஜகவும், அதிமுகவும் இப்படி பிரித்துக் கொண்டுள்ளன.

புதுச்சேரி நிலவரம்
புதுச்சேரி யூனியன் பிரேதசத்தில் 30 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. புதுச்சேரியில் 23 தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் தலா ஒரு தொகுதியும் என மொத்தமாக 4 மாவட்டங்களை உள்ளடக்கியது இந்த யூனியன் பிரதேசம்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications