பழிவாங்க முடிவு பண்ணிட்டாங்க.. "டிபன்ஸ் மோடில்" இறங்கிய ஸ்டாலின்.. செந்தில் பாலாஜி விசுவாசம்! அலறுதே
சென்னை: திமுகவை குறி வைத்து அமலாக்கத்துறை இறங்கி உள்ளது. அமலாக்கத்துறை மிக வலுவாக உள்ளது. பாஜக பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது.
அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இவர் தொடர்ந்து பெயில் மறுக்கப்பட்டு சிறையிலேயே உள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் நான்காவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில், செந்தில் பாலாஜியை விட்டுக்கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை. காரணம் செந்தில் பாலாஜி திமுகவிற்காக உழைத்தார். கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்தினார். திமுகவிற்கு விசுவாசமாக இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தார். திமுகவின் முக்கிய அமைச்சர் முகமாக அவர் தேர்தல் நேரங்களில் இருக்கிறார். அவரை விட்டுக்கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை.

அவரின் குற்றம் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லை, இருக்கிறது என்பதெல்லாம் வேறு விஷயம். அவர் மீது ஒரு காலத்தில் குற்றச்சாட்டு வைத்ததே ஸ்டாலின்தான். அதனால் அதை பற்றி இங்கே பேச முடியாது. செந்தில் பாலாஜியின் விசுவாசம் காரணமாக அவரை விட்டுக்கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை. அவ்வளவுதான். முதல்வர் குடும்பத்திற்கு செந்தில் பாலாஜி விசுவாசமாக இருக்கிறார். அதனால் விட்டுக்கொடுக்க ஸ்டாலின் விரும்பவில்லை.
தார்மீக ரீதியில் இது தவறு. ஆனாலும் ஸ்டாலின் அவரை வைத்துக்கொள்ள முடியும். அடுத்து ஏ வ வேலு கைதாகலாம். அல்லது வேறு அமைச்சர்கள் கைதாகலாம். ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் அமைச்சர்களை மாற்ற முடியாது. ஏற்கனவே செந்தில் பாலாஜியை மாற்றிவிட்டார். அதன்பின் பல அமைச்சர்கள் ரெய்டுக்கு உள்ளாகி உள்ளனர்.
ஸ்டாலின் பிளான்: ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் அமைச்சர்களை மாற்ற முடியாது. இதனால் அவர் மொத்தமாக இளைஞர்களை உள்ளே கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளன. ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை கூறியுள்ளனர். இதனால் ஸ்டாலின் டிபன்ஸ் மோடிற்கு சென்றுள்ளார். அவர் அடித்து ஆடும் மோடிற்கு இறங்கி உள்ளார்.
சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர். சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இவர்களை கைது செய்ய கூட வாய்ப்புகள் உள்ளன.
திமுகவை குறி வைத்து அமலாக்கத்துறை இறங்கி உள்ளது. அமலாக்கத்துறை மிக வலுவாக உள்ளது. பாஜக பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது. அப்படி இருக்க ஸ்டாலின் என்ன செய்ய முடியும். அதில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் அடித்து ஆட முடிவு செய்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications