Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது சங்கபரிவார் கும்பலா?.. 2005-ல நீங்க செய்தது மறந்து போச்சா?.. குஷ்பு Vs வன்னியரசு மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு போட்ட ட்வீட்டிற்கு பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தலைத்தூக்கி வருகிறது. மண்டியாவில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் மாணவியை இந்துத்துவா மாணவர்கள் முற்றுகையிட்டு காவிக் கொடி காட்டி ஜெய்ஸ்ரீராம் என்றனர். பதிலுக்கு அந்த மாணவியும் அல்லாஹ் ஹூ அக்பர் என முழங்கினார். இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் ஹிஜாப்பை அனுமதிக்க வேண்டுமா என்ற வாதத்தில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கூறுகையில் கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல.

சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மதத்தை உங்கள் பேட்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா என தனது ட்விட்டரில் குஷ்பு கேள்வி எழுப்பியிருந்தார்.

வன்னியரசு

வன்னியரசு

இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு இந்தக் கொடுமையை கண்ட பிறகும் உங்களது கள்ளமவுனமும் சுயநலமும் அமைதி காக்கச் சொல்கிறதா?
இதே தாக்குதலும் அச்சுறுத்தலும் #சங்பரிவாரக்கும்பலால் நாளை உங்களது இரு பெண் குழந்தைகளுக்கும் ஏற்படாது என நம்புகிறீர்களா ? என குஷ்புவிடம் ட்விட்டரில் இந்த கேள்வியை கேட்டார்.

விசிக

அதற்கு குஷ்பு தனது தொடர் ட்வீட்டுகளில் அளித்த பதில்: உங்கள் கட்சியை பற்றி என்னிடம் பேசாதீர்கள். உங்களை (விசிக) பற்றி என்னை விட வேறு யாருக்கு நன்றாக தெரியும்?. எதையும் மறந்துவிடாதீர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குண்டர்களால் தனியொருவராக நான் போராடி வென்றிருக்கிறேன். நான் ஒரு பெண், குழந்தைகளுக்கு தாய், அதற்கு மேல் இந்தியர். இது போல் பயமுறுத்த வேறு யாராவது பலவீனமான பெண் இருந்தால் கண்டுபிடியுங்கள்.

அடையாளம்

உங்களை போன்ற குண்டர்களுக்கு உங்கள் முகத்தையும் அடையாளத்தையும் காட்ட தைரியமே கிடையாது. அப்போதும் கோழைகள்தான், இப்போதும் நீங்கள் கோழைகள்தான். காலங்கள் மாறினால் உங்களிடம் எதுவுமே மாறவில்லை. எனது குழந்தைகள் பள்ளிக்கு சீருடை அணிந்து செல்கிறார்கள். இந்தியர் என்ற பெருமையுடன் முன்னோக்கி செல்கிறார்கள். மதத்தை அல்ல.

முற்றுகையிட்ட விசிக குண்டர்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டு எனது 5 வயது மகள் டெங்கு காய்ச்சலால் போராடிய போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாதபடி என் வீட்டை சுற்றி முற்றுகையிட்டீர்கள். அங்கு எந்த சங்க பரிவார்களையும் நான் பார்க்கவில்லை. அது நீங்களும் முதுகெலும்பில்லாத கோழைத்தனமான கும்பலும்தான். உங்களை போன்ற நிறைய குண்டர்களை நான் பார்க்க வேண்டியுள்ளது என குஷ்பு தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்பு

குஷ்பு

கடந்த 1990களில் இருந்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் குஷ்புவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எந்த விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கருத்து சொன்னாலும் அதற்கு குஷ்பு எதிர் கருத்து சொல்வதும் குஷ்பு சொல்லும் கருத்துக்கு விசிக பதிலடி கொடுப்பதையும் வாடிக்கையாக உள்ளது. இந்த மோதல் இன்று வரை தொடர்வதற்கு உதாரணம்தான் இந்த வன்னியரசுவுடனான ட்விட்டர் மோதல்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+