Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குறி".. திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க.. "அவரை" கையில் எடுக்கிறதா பாஜக.. பரபரக்கும் புதிய வதந்தி!

புது ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் புதிய ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன...!

திமுக அபார வெற்றி இல்லை என்றாலும் டீசன்ட் வெற்றியை எட்டிபிடித்துள்ளது.. தன் மெஜாரிட்டியையும் நிரூபித்துள்ளது.. இதையடுத்து, விரும் 7-ம்தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்க போவதாகவும் கூறப்படுகின்றன.

ஒருபக்கம் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சைலண்ட்டாகவும், எளிமையாகவும் நடந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் கொரோனா தடுப்பு விஷயங்களில் ஸ்டாலின் அக்கறை காட்டி வருகிறார்.. இதற்காக தினந்தோறும் அதிகாரிகளிடமும் தீவிரமான ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.

 பரபரப்பு

பரபரப்பு

இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தில் புதிய ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்றைய தினம் அதாவது 5-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கிரண்பேடி

கிரண்பேடி

கிரண்பேடி என்றதுமே பலருக்கும் தூக்கி வாரிப்போட்டுள்ளது.. கடந்த 2016-ல் இருந்து புதுச்சேரிக்கு புதுச்சேரி தந்த குடைச்சல் கொஞ்சநஞ்சமல்ல.. நாராயணசாமிக்கு 5 வருஷமாக இவருடன் மல்லுக்கட்டவே சரியாக இருந்தது.. ரோட்டில் பெட்ஷீட்டை விரித்து படுத்து போராடினார்.. சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பு காட்டினார்.. இறுதியில் அதாவது, அந்த மாநிலத்துக்கு தேர்தல் வரப்போகிறது என்று தெரிந்ததுமே துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டார்.

சீக்ரெட்

சீக்ரெட்

பாஜக மீதான களங்கத்தை துடைக்கவும், அந்த மாநிலத்தல் ஒரு சுமூகமான சூழநிலை ஏற்படுத்தவும், தமிழிசையை கொண்டு வந்தது பாஜக.. கூடுதல் பொறுப்பை ஒதுக்கி, நிலைமையை சமாளித்தது.. ஆனால், இந்த விஷயத்தையே பாஜக ரொம்ப சீக்ரெட்டாகவே வைத்திருந்தது.. கிரண்பேடிக்கு கூட இப்படி ஒரு அறிவிப்பு வரும் என்று தெரியாதாம்..

புதுச்சேரி

புதுச்சேரி

இப்படியெல்லாம் புதுச்சேரியில் நடந்த களேபரத்தை பார்த்து தமிழகம் கலங்கிதான் போனது.. அப்போதே திருமாவளவன் ஒன்று சொன்னார், "இன்னைக்கு புதுச்சேரிக்கு வந்திருக்கிற நிலைமைதான் நாளைக்கு தமிழகத்துக்கும் வரும்.. அங்கே நடக்கிறது ஒரு டிரெயிலர்தான்" என்று அலர்ட் செய்ததையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது. ஒருவேளை அதற்கான அறிகுறிதான் தற்போது தெரிய ஆரம்பித்துள்ளதா தெரியவில்லை..

வதந்தி

வதந்தி

கிரண்பேடியை தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.. ஒருவேளை கிரண்பேடி இல்லாவிட்டாலும், மத்திய பாஜக அரசுக்கு நெருக்கமான ஒருவரை தமிழகத்தின் ஆளுநராக நியமிப்பது மூலம், ஸ்டாலினின் செயல்பாடுகளை தடுக்க முடியும், அல்லது கிடுக்கிப்பிடி போட முடியும் என்று பாஜக திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

பாலம்

பாலம்

இப்படி பரவி வரும் தகவல்கள் குறித்து நாம் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொல்லும்போது, "எது வேணும்னாலும் நடக்கலாம்.. பாஜகவிடம் முழு ஃபோர்ஸ் உள்ளது.. காஷ்மீரை எடுத்துக்குங்க, 370 என்னாச்சு? இந்தியாவையும் காஷ்மீரையும் இணைக்கும் பாலமாக இருந்ததே... திடீர்னு ஓவர்நைட்டில் வெட்டி விட்டுவிட்டுட்டாங்களே.. எங்களுடையதுதான் ரியல் எஸ்டேட்ன்னு சொல்லிட்டாங்களே.. அப்பறம் யூனியன் பிரதேசமாயிடுச்சு..

காஷ்மீர்

காஷ்மீர்

ஆர்டிகிள் 370 என்பது ஒரு பாலமாக இருந்த நிலையில், அதை எப்படி எளிதாக தூக்கி எறிந்தார்களோ அதுபோலதான் நிலைமை எப்படி வேணும்னாலும் மாறலாம்.. ஒரு பாதுகாப்பு நிறைந்த காஷ்மீருக்கே இந்த நிலைமை என்றால் என்ன சொல்வது? எனவே, மடியில் கனம் இல்லாமல் இருந்தால், பாஜக யாரிடமும் நெருங்கவே முடியாது.. இல்லாவிட்டால் கஷ்டம்.. இன்னைக்கு ஜெகன் மோகன் ஏன் வாயே திறக்காமல் இருக்கார்? ஏன் சந்திரசேகர் ராவ் சத்தமில்லாமல் இருக்கிறார்?

முடக்கம்

முடக்கம்

அதேபோல, திடுதிப்பென்று ஆளுநரை எல்லாம் மாற்ற முடியாது.. யூனியன் பிரதேசங்களின் நிலைமை வேறு.. தமிழகம் போன்ற மாநிலங்களின் நிலைமை வேறு... யூனியன் பிரதேசங்கள் முழுவதுமாக பாஜகவின் கட்டுப்பாட்டில் வரும்.. அந்த வகையில், மாநில அரசுகளின் செயல்பாடுகளை ஆளுநரால் அவ்வளவு சீக்கிரம் முடக்க முடியாது.. ஆளுநர்களுக்கான அதிகாரமும் மாநிலங்களில் ஒரு அளவுக்குதான் இருக்கும்.. எனவே, இது புது ஆளுநர் என்பது வதந்தியாக இருக்கலாம்.. ஒருவேளை ஆளுநர் மாறினால், அவர்களை சமாளித்து காட்டினால் திமுகவுக்கு அது பெரிய பிளஸ்தான்..!" என்றனர்.

வதந்தி

வதந்தி

ஆனால் திமுகவினரோ இதை வேறு மாதிரியாக டீல் செய்கிறார்கள்.. பேடி என்ன மோடியே வந்தாலும் ஸ்டாலின் சந்திப்பார்.. சமாளிப்பார்.. வெல்வார்.. காரணம் இது திமுக ஆட்சி, அதிமுக ஆட்சி அல்ல என்று கெத்தாக சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+