"உங்க பேன்ட் ஈரமாகிடும்.. உங்களுக்கு தைரியம் இருந்தால்".. கார்ட்டூனிஸ்ட் பாலா மீது குஷ்பு பாய்ச்சல்
கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு குஷ்பு பதிலடி தந்துள்ளார்
சென்னை: "நீங்கள் மரணத்தை சந்திக்கும் அந்த நிமிடம் உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது. உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்" என்று தன்னுடைய கார் விபத்து குறித்து விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு குஷ்பு பதிலடி தந்துள்ளார்.
2 தினங்களுக்கு முன்பு கடலூரில் வேல் யாத்திரை நடந்தது.. இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பாஜகவின் குஷ்பு காரில் சென்று கொண்டிருந்தார்... அப்போது, மேல்மருவத்தூர் அருகே குஷ்பு கார் விபத்தில் சிக்கியது... அவரது காரின் டேங்கர் லாரி உரசி விபத்து ஏற்பட்டது.. இதில் குஷ்பு காயமின்றி தப்பினார்..

அதேசமயம், காரின் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணையையும் மேற்கொண்டனர்.. அப்போது, விபத்து குறித்து, "கடவுளின் கருணையால் உயிர் பிழைத்தேன்" என்று குஷ்பு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

எனினும், இந்த கார் விபத்தில் தப்பியதற்கு குஷ்புவுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், ஒருசிலர் இந்த விபத்து விமர்சித்தனர்.. குறிப்பாக விபத்து சித்தரிக்கப்பட்டது என்று கிண்டலாகவும் தெரிவித்து வந்தனர்.. அந்த வகையில், கார்ட்டூனிஸ்ட் பாலாவும், தனது ட்விட்டரில், "குஷ்பூ அவர்கள் மிகச்சிறந்த நடிகை என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படம்" என்று தெரிவித்து, அத்துடன், கார் விபத்தின்போது குஷ்பு எடுத்த போட்டோவையும் ஷேர் செய்திருந்தார்.
பாலாவின் இந்த ட்வீட்டுக்கு குஷ்பு பதிலடி தந்துள்ளார்.. தன்னுடைய ட்விட்டில், "நான் போராடிய ஒருவர் இப்படி பேசுவதை கேட்டு வெட்கப்படுகிறேன்... உங்களுக்கு தைரியம் இருந்தால், போலியான விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.. நீங்க மரணத்தை சந்திக்கும் அந்த நிமிஷம் உங்கள் முகம் என்னைப்போல் தைரியமாக இருக்காது... உங்கள் பேண்ட்டை நீங்கள் ஈரமாக்கி விடுவீர்கள்.. உங்களது பேச்சு கோழைத்தனமாக உள்ளது... விரைவில் குணமடையுங்கள் பாலா" என்று சரமாரியாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications