சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏங்க.. புரிஞ்சிக்க மாட்டீங்களா".. டக்கென காரில் ஏறிசென்ற குஷ்பு.. மிரண்ட ஆயிரம் விளக்கு.. என்னாச்சு

பாஜக குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் நாளுக்கு நாள் குஷ்புவின் பிரச்சாரம் மெருகேறி கொண்டிருக்கிறது.. திமுகவுக்கு இணையாக தன் பிரச்சாரத்தை முன்னிறுத்தும் முயற்சிகளையும் குஷ்பு மேற்கொண்டு வருகிறார்.

சேப்பாக்கத்தை குறி வைத்து காய் நகர்த்தி கொண்டிருந்த குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.. திமுகவின் கோட்டை என்று தெரிந்தும் குஷ்பு துணிந்து களமிறங்கி உள்ளார்.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால், குஷ்புவிடம் உள்ள இயல்பான குணங்களே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், குஷ்புவுக்கு நடிகை என்ற பந்தா எப்போதுமே இருக்காது.. எல்லாரிடமும் இயல்பாகவே வந்து பேசுவார்.. அப்படித்தான், தொகுதிக்குள் கேஷூவலாக பேசி கொண்டிருக்கிறார். பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார்..

 இஸ்லாமியர்

இஸ்லாமியர்

இத்தனைக்கும் சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது... பெரும்பாலான இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்லவே வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. இதெல்லாம் தெரிந்துதான், இஸ்லாமிய பெண்களின் வாக்குகளை குஷ்பூ குறி வைத்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்..

அதிர்ச்சி

அதிர்ச்சி

இஸ்லாமியரின் வீட்டுக்குள்ளேயே புகுந்தும் விடுகிறார்.. அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் தந்துவிடுகிறார். இப்படித்தான் நேற்று குலாம் அபாஸ் அலிகான் 7வது தெருவில் வாக்கு சேகரித்தார் குஷ்பு.. திடீரென அந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்.. குஷ்புவை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்களுக்கு கையும் ஓடல.. காலும் ஓடல.. அவர்களோடு சேர்ந்து குஷ்பு செல்பி எடுத்து கொண்டார்..

 ஸ்பெஷல் டீ

ஸ்பெஷல் டீ

அதுமட்டுமல்ல, அந்த வீட்டு கிச்சனுக்கும் சென்றுவிட்டார். கடகடவென டீ பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வைத்து டீ போடு ஆரம்பித்துவிட்டார்.. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு டீ தந்துவிட்டு வெளியேறினார். இப்படி நாளுக்கு நாள் குஷ்புவின் பிரச்சாரம் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, பெரியவர்களை பார்த்தால் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது குஷ்புவின் பழக்கம்.. அந்த பழக்கம் தொகுதிக்குள்ளும் அவருக்கு வந்துவிடுவதால், தொகுதியே திக்குமுக்காடி போயுள்ளது.

அதிமுக

அதிமுக

ஆனால், ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலை போலீஸ் குவார்ட்டர்ஸில் குஷ்பு நடந்து சென்று வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.. ரொம்ப நேரமாகவே நடந்து கொண்டிருந்தால், கால் வலி வந்துள்ளது போலும். அதனால் டயர்ட் ஆகிவிட்டார்.. தொடர்ந்து அவரால் நடக்கவும் முடியவில்லை.. ஆனால், அவருடன் இருந்த கூட்டணி அதிமுகவினரோ, பக்கத்தில்தான் சுதந்திர நகர் பகுதி இருக்கு.. அங்கே நாம போக வேண்டும்.. அந்த பகுதி மக்கள் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க என்றனர்..

 கால் வலி

கால் வலி

ஆனால், குஷ்புவோ, ப்ளீஸ்.. புரிஞ்சுக்குங்க.. ஏற்கனவே கால் வீக்கமா இருக்கு.. என்னால முடியல.. " என்று சொல்லி காரில் ஏறி சென்றுவிட்டாராம். எனினும், இன்றைய தினமும் வழக்கம்போலவே குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் தன் முத்திரையை பதிப்பார் என்றே தெரிகிறது. திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தாமரையை மலர வைக்காமல் விட மாட்டார் போல..!

English summary
BJP Kushboo campaign in Thousand Light Constitution against DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X