ஒரே நேரத்தில் 2 "குஷ்பு".. ஒரே இடத்தில் பார்த்து.. அப்டியே மிரண்டுபோன ஆயிரம் விளக்கு.. ஏன் தெரியுமா?
குஷ்புவின் ஆயிரம் விளக்கு தொகுதி பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது
சென்னை: குஷ்புவின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. காரணம்.. அதில் 2 குஷ்பு இருக்கிறார்கள்... இதுதான் அதன் ஸ்பெஷலே!
இந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதிதான் செம்ம ஹைலைட் ஆக இருக்க போகிறது போலும்.. ஏற்கனவே ஸ்டார் தொகுதி அது.. இப்போது குஷ்பு களமிறங்கிவிடவும் மேலும் பரபரப்பாகி வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார்... சேப்பாக்கம் தொகுதியை அவருக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதிமுக அந்த தொகுதியைப் பாமகவுக்கு ஒதுக்கியது.. இதனால், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை பாஜக தலைமை, வேட்பாளராக நிறுத்தியது.

திமுக வேட்பாளர்
திமுக வேட்பாளராக டாக்டர் எழிலன் களம் இறங்கி உள்ளார்.. ஆனால் குஷ்புவின் பேச்சும், வசவும் முழுவதும் ஸ்டாலினை நோக்கியே பாய்ந்து கொண்டிருக்கிறது. தொகுதிக்குள் தனக்கான வாக்குகளை கேட்டு வருகிறார் குஷ்பு.. அந்த வகையில், எந்த தெருவையும் விடுவதில்லை.. எல்லாருடனும் ஓடி ஓடி பேசுகிறார்.. விசாரிக்கிறார்... வாக்கு கேட்கிறார்.

குஷ்பு
அப்படித்தான் குஷ்புவை சந்தித்தார் குஷ்பு.. ஆம்.. அந்த இளம் பெண்ணின் பெயரும் குஷ்புவாம்.. பிரச்சாரம் செய்யும்போது இவரை சந்தித்திருப்பார் போலும்.. பெயர் என்ன என்றும் கேட்டதற்கு குஷ்பு என்று பதிலளித்துள்ளார்.. இதை கேட்டதும் குஷ்புவே ஷாக் ஆயிட்டாராம்.. உடனே அவருடன் ஒரு போட்டோவும் எடுத்து கொண்டு, அதை தன்னுடைய ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.
|
ட்வீட்
"என் உடன்பிறவா தங்கச்சி.. என் வெற்றி படங்களை பார்த்த பிறகு, என்னுடைய பெயரையே இவருக்கு பெற்றோர் வைத்துள்ளார்கள்" என்று மகிழ்ச்சி பெருக்குடன் பதிவிட்டுள்ளார் குஷ்பு.. அந்த போட்டோவில் 2 குஷ்புவும் சிரித்தபடி காணப்படுகின்றனர்.. இந்த 2 குஷ்புவையும் ஒன்றாக பார்த்ததும், ட்விட்டர்வாசிகள் ஒன்றாக திரண்டு வந்துவிட்டனர்..

பாஜக
"ஆமா.. மேடம்.. இதுக்குதான் நீங்க அங்கே போனீங்களா? உங்களுக்கு கோயில் எல்லாம் கட்டுனோமே" என்று பதிவிட்டுள்ளனர்.. இன்னொருத்தரோ உச்சக்கட்ட ஆதங்கத்துக்கே போய்விட்டார்.. அவர் தீவிர காங்கிரஸ்காரர் போலும்.. "உங்களுக்கு எப்படி இவங்களுக்கு துரோகம் பண்ண மனசு வந்தது? பிஜேபில சேந்துட்டீங்களே" என்று இவ்வளவு நாள் கழித்து கேட்டுள்ளார். ஆக.. குஷ்புவின் பாஜக பிரச்சாரம் ஒருபக்கம் களை கட்டினாலும், காங்கிரஸை விட்டு குஷ்பு சென்றதை இன்னும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை என்று மட்டும் தெரிகிறது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications